
மார்ச் 18, புளோரிடா (World News): தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், டேகுலபல்லி பகுதியை சேர்ந்த தம்பதி மோகன்ரெட்டி-பவித்ரா தேவி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் 2வது மகளான பிரகதிக்கும், சித்திபேட்டையை சேர்ந்த ரோஹித் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள். ரோஹித், அவரது மனைவி பிரகதி, ரோஹித்தின் தாயார் சுனிதா, அமெரிக்காவில் புளோரிடாவில் (Florida) வசித்து வந்தனர். PM Narendra Modi: இந்தியா-சீனா உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்து; சீன வெளியுறவுத்துறை வரவேற்பு.!
மூவர் பலி:
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று (மார்ச் 17) அதிகாலை 3 மணியளவில் ரோஹித், அவரது மனைவி, தாயார் மற்றும் 2 மகன்கள் என அனைவரும் காரில் புளோரிடாவில் ஷாப்பிங் செய்ய சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் இருந்து வந்த ஒரு டிரக் இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதி (Accident) விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிரகதி (வயது 35), இவரது மகன் அர்வின் (வயது 8), சுனிதா (56) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவர் படுகாயம்:
விபத்தில் சிக்கி ரோஹித் மற்றும் மற்றொரு மகன் படுகாயமடைந்தனர். இவர்கள் தற்போது புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.