RO இல்லாமல் நீரை சுத்திகரிக்கும் 5 எளிய வழிமுறைகளை காண்போம்!

2 hours ago
ARTICLE AD BOX

டல் ஆரோக்கியத்திற்கு நீண்ட ஆயுளுக்கும் தூய்மையான குடிநீர் மிகவும் அவசியமாகும் . ஆகையால் தான் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே  RO (Reverse Osmosis) அமைத்தோ அல்லது கேன் தண்ணீரையோ குடிக்கிறார்கள். வசதி இல்லாதவர் களுக்கு  ROஅமைப்பு இல்லாமல் தண்ணீரை சுத்தமாக்கும் 5 வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. காய்ச்சி பருகுதல் 

 5 முதல் 10 நிமிடங்கள்   நீரை அதிகமான சூட்டில் கொதிக்கவிட்டு பின்பு  ஆறவிட வேண்டும். ஆறிய பின் ஒரு சுத்தமான கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் சேமிக்கவும்.

நீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ்கள்,நுண்ணுயிரிகள் அழிந்து குடல் நோய்களை தடுக்கும் எளிதாக வீட்டில் செய்யக்கூடிய நம்பகமான முறையாகும். நீரை அதிகமாக காய்ச்சினால் முக்கிய தாது உப்புகள் (Essential Minerals) குறையலாம்.

2. கூழாங்கல் மற்றும் மணல் வடிப்பு - இயற்கை சுத்திகரிப்பு முறை

ஒரு பெரிய பாத்திரத்தில், கீழே மணல் அடுக்கு, அதன் மேல் சிறிய கூழாங்கற்கள், அதற்கு மேலே ஆக்டிவேடட் கரித்துகள் வைக்கவும்.மேலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, நிழலிடத்தில் சுத்தமான பாத்திரத்தில் சேமிக்கவும்.இதில் இருக்கும் அழுக்குகள் கீழே படிந்ததும், மேலிருக்கும் தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
உட்கார்ந்திருக்கும் போது காலாட்டும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? போச்சு!
Here are 5 easy ways to purify water without RO!

நீரின் நிறத்தையும் கசப்பு தன்மையையும் மாற்றி உடலுக்கு ஏற்றதாக மாற்றும். நச்சு சேர்மங்களை குறைத்து தற்காலிகமாக சுத்தமாக்கும் இந்த இயற்கை முறை பள்ளத்தாக்கு பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

3. முருங்கை விதை சுத்திகரிப்பு முறை

ஒரு டீஸ்பூன் அளவு  முருங்கை விதைகள் (Moringa Seeds) நன்றாக அரைத்த தூளை ஒரு  லிட்டர் தண்ணீரில் கலந்துவிடவும். ஒரு மணி நேரத்தில் கீழே தேவையற்ற மண் தனிமங்கள் தங்கி மேலே இருக்கும் தூய நீரை வடிகட்டி குடிக்கலாம்.

நீரில் இருக்கும் கழிவுகளை உறிஞ்சி, நச்சுப்பொருட்களை அகற்றி, தெளிவான நீராக்கி குடிக்க ஏற்றவாறு செய்யும். குறைந்த செலவில் இயற்கையாக செய்யக்கூடிய இந்த முறையில், நீண்ட காலம் சேமித்து வைக்காமல் உடனே நீரை பயன்படுத்தவேண்டும்.
 

4. சூரிய ஒளி சுத்திகரிப்பு

கடுமையான சூரிய ஒளியில் சுத்தமான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி,   6 முதல் 8 மணி நேரம் வைக்கவும். இதனால் சூரியனின் அல்ட்ராவயலட் (UV) கதிர்கள் நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். பின்னர் தண்ணீரை குளிர்ச்சி அடைய விடவும்.

எளிதாக குறைந்த செலவில் செய்யக்கூடிய இந்த முறையில் நீரில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிவதால் மழைநீர் மற்றும் குளத்துநீருக்கு ஏற்றது.

5. தாவர மூலிகைகள் சுத்திகரிப்பு முறை

துளசி இலைகள் , வெற்றிலையின் சாறு,கிராம்பு அல்லது இலவங்கப் பட்டை போன்ற மூலிகைகளை நீரில் சில மணி நேரம் ஊறவிட்டு பின்னர் வடிகட்டி பருகுவதுதான் தாவர மூலிகைகள் சுத்திகரிப்பு முறை.

நீரில் உள்ள நச்சுகளை நீக்கி, அமிலத்தன்மை மற்றும் செரிமான கோளாறுகளை சீராக்கி உடலுக்கு நன்மை தரும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையும் கொண்டது இம்முறையில் நீரை நன்கு வடிகட்டி பருகுதல் அவசியம்.

மேற்கூறிய ஐந்து வழிமுறைகளும் செலவில்லாத பாதுகாப்பாக நீரை சுத்திகரிக்கும் முறைகளாக பார்க்கப்படுகின்றன.

Read Entire Article