ARTICLE AD BOX
Relationship : ஒரு காதல் அல்லது திருமண உறவில் சண்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஏனெனில், ஒருவரைப்போல் மற்றொருவர் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர். தனியான குணங்கள் கொண்டவர். ஒருவருக்கு பிடித்த விஷயம் மற்றவருக்கு பிடிக்காது. ஒருவரின் விருப்பங்கள் வேறாக இருக்கலாம். எனினும் இவர்களை இணைப்பது அன்பாக இருக்கும். ஒரு உறவில் அந்த அன்பு எப்போது குறைகிறது. புரிதல் இல்லாதபோதுதான் அன்பு குறைகிறது. எனவே ஒருவருக்கு புரிதல் ஏற்பட என்ன செய்யவேண்டும்.
உங்கள் பார்ட்னரை புரிந்துகொள்ளுங்கள்
ஒரு உறவில் சண்டை ஏற்படுவதற்கான காரணிகள் என்னவென்று பாருங்கள். உங்களுக்கு என்ன பிடிக்கும்? உங்கள் பார்ட்னருக்கு என்ன பிடிக்கும் என்று பாருங்கள். எந்தச் சூழல் சண்டையை உருவாக்குகிறது என்று பாருங்கள்.
பிரச்னையைப் பாருங்கள்
அவர்கள் உங்கள் பார்ட்னர் என்பதை மனதில்கொள்ளுங்கள். உங்களையும், பிரச்னையையும்தான் பார்க்கவேண்டும். உங்களுக்கும் உங்களின் பார்ட்னரையும் இங்கு பார்க்கக்கூடாது. உங்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் மனப்பக்குவம்தான் வேண்டும். உங்கள் பார்ட்னரை கோபித்துக்கொள்வதால் எந்த பலனும் இல்லை.
கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள்
நாம் எப்போதும் நாம் செய்வதுதான் சரியென்று எண்ணிக்கொண்டு இருப்போம். ஆனால் மற்றவர்களுக்கும் பேசுவதற்கும், அவர்களின் கோணத்தை விளக்குவதற்கும் நாம் வாய்ப்புக்களைக் கொடுக்கவேண்டும். எனவே மற்றவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை கேட்டால்தான் அவர்களிடம் உள்ள நியாயம் புரியும்.
ஒரே மாதிரியான பிரச்னைகளை தவிர்க்கவேண்டும்
நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான பிரச்னைகளுக்காக மீண்டும், மீண்டும் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள். ஏனெனில் அதற்கு தீர்வு என்பது எப்போதும் கிட்டாது. அதற்கு தீர்வு உண்டு என்றால் அது முதல் முறையிலேயே கிடைத்திருக்கும். எனவே ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருப்பது நல்லது கிடையாது.
தீர்வு காணுங்கள்
உங்களின் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்னவென்று பாருங்கள். அந்த தீர்வு ஒரு கட்டத்தில் உதவும் என்றால், இருவருமே சிறிது இறங்கி வாருங்கள்.
உங்களின் குரலை உயர்த்தாதீர்கள்
பிரச்னைகளின்போது, நீங்கள் கத்தாதீர்கள், கூச்சலிடாதீர்கள். அது எத்தனை சிறிய பிரச்னையாக இருந்தாலும் அல்லது பெரிய பிரச்னையான இருந்தாலும் சரி, நீங்கள் கத்தி கூச்சலிடுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. எனவே அமைதியாக இருந்து பிரச்னைகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
வெளிப்படையாக பேசிவிடுங்கள்
பிற்காலத்தில் உங்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு இருவருமே தயங்கவேண்டாம். ஏனெனில் பிரச்னைகளை தீர்த்துவிட்டுத்தான் உறங்கவே செல்லவேண்டும். பிரச்னைகளுக்கான தீர்வு என்பது மிகவும் முக்கியம் என்பதை மனதில்கொள்ளுங்கள்.
பிரச்னைகளை கடந்துவிடுங்கள்
எப்போதும் அமரந்துகொண்டும், பிரச்னைகள் குறித்து ஆண்டுக்கணக்காக பேசிக்கொண்டும் இருக்காதீர்கள். பிரச்னைகளை தூசி தட்டி தூக்கிவீச முயற்சியுங்கள். பிரச்னைகளை கடந்து செல்வதுதான் சிறந்தது. அந்த இடத்திலே தேங்கியிருந்தால் மனவருத்தம்தான் மிஞ்சும். நல்ல உறவுக்கு மன அமைதி முக்கியமானது.
பிரச்னைகளிலே அமைதி காணுங்கள்
உங்களுக்கு உங்கள் பார்ட்னருக்கும் ஏன் பிரச்னை வருகிறது? எதனால் பிரச்னை வருகிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே அமைதியைக் காண முயலுங்கள். இந்த பிரச்னை உண்டு என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதானே, எனவே இது இருக்கட்டும் என்று அமைதியாகச் சென்றுவிடுங்கள்.
மற்றவர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களின் பார்ட்னரும் ஒரு மனிதன் தான். அவர்களும் தவறு செய்வார்கள்தான். ஒருவரும் இங்கு பர்பெஃக்ட் கிடையாது என்பதை மனதில்கொள்ளுங்கள். எனவே மற்றவர்களையும் ஏற்க பழகுங்கள். இதைச் செய்தால் பாதி தீர்வு கிடைத்துவிடும்.

டாபிக்ஸ்