ARTICLE AD BOX
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 18வது ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்குமே முதல் போட்டி என்பதால் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். டாஸானது 7 மணிக்கு விசப்படும். அதற்கு முன்பாக தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
எதில் பார்க்கலாம்
இந்த போட்டியை மொபைல் அல்லது இணையத்தளம் மூலம் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஆஃப் அல்லது இணையத்தில் பார்க்கலாம். ஐபிஎல் தொடரை ஜியோ ஹார்ஸ்டாரில் பார்க்க விரும்புபவர்கள், மார்ச் 17ஆம் தேதிக்கு பிறகு ரூ. 299 அல்லது அதற்கு மேல் உள்ள திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருப்பவர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் தொடர் முழுவதையும் காணலாம்.
மேலும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இல்லை.. இந்த வீரர் தான் கேப்டன்! என்ன காரணம்?
தொலக்காட்சி
ஐபிஎல் தொடரை தொடலைக்காட்சியில் பார்க்க நினைப்பவர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். அந்தந்த பிராந்திய மொழிகளிலும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
KKR vs RCB
கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆனால் அப்போது கொல்கத்தா அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் அணிக்கு விளையாட உள்ளார். இருப்பினும், ஏற்கனவே அந்த அணியில் இருந்த ரசல், நரைன், வருன் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். கொல்கத்தா அணியை பொருத்தவரை அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அந்த அணியின் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது. கீ பிளேயரான வருண், நரைன் போன்றவர்கள் நன்றாக விளையாடினால் அந்த அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொருத்தவரை, அதிரடியான பேட்ஸ்மேன்கள் பில் சால்ட், லிவிங்ஸ்டன், டிம் டேவிட், நிதானமாக ரன்களை சேர்க்க விராட், படிதார் போன்றோர், வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஹெசில்வுட் போன்றோர்கள் உள்ளனர். ஆனால் சுழற்பந்து வீச்சை பொருத்தவரை அந்த அணி சற்றி பலவீனமாகவே உள்ளது. கீ பிளேயராக குர்னால் பாண்டியா, ஸ்வப்னில் சிங் போன்றோர் உள்ளனர். இவர்கள் நன்றாக விளையாடினால் வெற்றி பெற முடியும்.
இரு அணிகளுக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ராஜட் பட்டிதார் (கேப்டன்), விராட் கோலி, ஃபில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரசிக் தர், குர்னால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், டிம் டேவிட், லுங்கி என்கிடி.
கொல்கத்தா நைட் ரைடஸ் அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், அன்ரிச் நார்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி, மொயின் அலி, உம்ரான் மாலிக்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ