ARTICLE AD BOX
Ravi mohan: என்னோட இளமை ரகசியம் இதுதான்.. நடிகர் ரவி மோகன் வெளியிட்ட சீக்ரெட்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இவரை முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம்பெற செய்துள்ளது. சமீபத்தில் இவரது வாழ்க்கையில் அடுத்தடுத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரியும் முடிவை வெளியிட்டிருந்தார் ரவி. மேலும் ஜெயம்ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்றும் மாற்றி அறிவித்திருந்தார். மாற்றங்கள் அதிகமாக இருந்தபோதிலும் அவரது திரைப்பயணம் பாதிக்காமல் பார்த்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் பிரதர் படம் அவரது நடிப்பில் வெளியானது.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஜெயம் படம் மூலம் துவங்கிய இவரது பயணம் அடுத்தடுத்த கட்டங்களில் நகர்ந்துள்ளது. சாக்லேட் ஹீரோவாக அதிகமான படங்களில் நடித்து வந்த இவர், அதிரடி ஆக்ஷன் கதைக்களங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார். பல வெற்றிப்படங்கள் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான நிலையில், சில காமெடி, குடும்ப சென்டிமெண்ட் கதைக்களங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ரவி மோகன் நடிப்பில் வெளியான பிரதர் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்தடுத்து ஜீனி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
பராசக்தி படத்தின் வில்லன்: இதனிடையே சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கிவரும் நிலையில், படத்தில் ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். படத்தின் முதல்கட்ட சூட்டிங் மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் விரைவில் இலங்கை செல்லவுள்ளனர். இதனிடையே அவரது ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு படமும் சிறப்பாக உருவாகிவருகிறது. இதனிடையே திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அவர், பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார்.
இளமையின் ரகசியம்: பராசக்தி மற்றும் கராத்தே பாபு படங்களில் டீசரை பார்த்து பலரும் தன்னை பாராட்டியதாக கூறியுள்ள ரவி மோகன், தற்போது தன்னுடைய முழு கவனமும் நடிப்பின்மீது மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ரசிகர்களை பெருமை கொள்ள செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய முதல் படமான ஜெயம் படத்திற்கு மட்டுமே தான் பியூட்டி பார்லர் சென்றதாகவும் அதன்பின்பு முடி வெட்டிக் கொள்ள மட்டுமே பார்லர் போவேன் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய இளமையின் ரகசியம் குறித்தெல்லாம் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரவி மோகனின் பழக்கம்: ஆனால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை தான் தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் தினந்தோறும் அதிகமான தண்ணீர் குடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். காலையில் எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்கப் போவதற்கு முன்னதாக தான் அதிகமான தண்ணீர் குடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய அவர் ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படத்தில் தான் நடிக்கிறேனா என்று கேள்வி எழுப்பினார். இந்த தகவல் தனக்கே தெரியாது என்றும் அதுகுறித்து தனக்கு தகவல் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.