Rasipalan Today : விருச்சிகத்திற்கு நன்மை; ரிஷபத்துக்கு புகழ் - இன்றைய ராசிபலன்!

1 day ago
ARTICLE AD BOX

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today Februray 25, 2025:

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...

மேஷம்

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். முயற்சி மேம்படும் நாள்.

ரிஷபம்

கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். அரசு செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். புகழ் மேம்படும் நாள்.

மிதுனம்

கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களை நம்பி செயல்படுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.

கடகம்

தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவு பெறும். உத்தியோகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.

சிம்மம்

மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.

கன்னி

பாக பிரிவினைகளில் முயற்சிகள் ஈடேறும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். தடைகளை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் ஏற்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு நன்மையை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

துலாம்

தொழில் நிமித்தமான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வீடு மாற்றும் எண்ணம் மேம்படும். நறுமண பொருட்கள் வழியில் ஆதாயம் அடைவீர்கள். விவசாய பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். தர்ம காரியத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்

சிறு தூரப் பயணம் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

தனுசு

நண்பர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதரர்கள் வழியில் அலைச்சல் மேம்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துச் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கலில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செலவு நிறைந்த நாள்.

மகரம்

பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். துணைவர் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். தாமதம் விலகும் நாள்.

மீனம்

உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புது முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் மீதான வதந்திகள் மறையும். உழைப்பு நிறைந்த நாள்.

Read Entire Article