ARTICLE AD BOX
Rashmika Mandanna: 28 வயது ராஷ்மிகா மந்தனாவுக்கு 12 வயதில் தங்கச்சி.. 16 வயசு வித்தியாசம்!
சென்னை: இந்திய சினிமாவில் தற்போது ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் தற்போது சாவா படம் வெளியாகி வட மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மகாராஸ்ட்ராவில் படம் நல்ல வசூல் குவித்து வருகிறது. மிகவும் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு 12 வயதில் ஒரு தங்கை இருப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ராஷ்மிகா மந்தனாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். இந்த படத்தில் அவரை நேஷ்னல் கிரஸ் என அழைத்து வந்த ரசிகர்களே எதிர்பார்க்காத அளவுக்கு கிளாமராக நடித்தார். குறிப்பாக படத்தில் இவர் வரக்கூடிய பெரும்பாலான காட்சிகள் கிளாமரான காட்சிகளாகத்தான் இருந்தது. ராஷ்மிகா மந்தனா இந்த அளவுக்கு கிளாமரில் ஸ்கோர் செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தில்தான் கிளாமர் என்றால், புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனை இவர் பிழிந்து எடுத்து விட்டார் என்றுதான் கூறவேண்டும். ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸ் என மொத்த தியேட்டரையும் தனது கிளாமர் காட்சிகளால் ஃபீலிங்ஸ் அடைய வைத்தார்.

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனா இந்த அளவிற்கு கிளாமராக நடிக்க முக்கிய காரணமும் இருப்பதாக பேச்சுகள் உலா வந்தது. அதாவது, புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலில் கிளாமர் நடனம் ஆடியிருப்பார். அவரது நடனம் குறித்து பெருமளவு பேசப்பட்டது. இப்படியான நிலையில் புஷ்பா 2 படத்தில் அப்படி மற்ற நடிகைகள் மீது கவனம் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார் ராஷ்மிகா. அதனால்தான் புஷ்பா 2 படத்தில் அட்டகாசமான யாரும் எதிர்பார்க்காத கிளாமர் நடனம் செய்துள்ளார்.

சாய் பல்லவி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் உள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இது தொடர்பாக அவரே அரசல் புரசலாக பல இடங்களில் சொல்லியுள்ளார். படங்களில் செமையாக ஒர்க் - அவுட் ஆன அவர்களின் கெமிஸ்ட்ரி, நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் - அவுட் ஆகியுள்ளது. இருவரும் அவ்வப்போது அவுட்டிங், டேட்டிங் என காதலை வளர்த்து வருகிறார்கள்.

12 வயது தங்கை: இப்படி இருக்கும்போது, நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கை குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது, " எனக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. எங்க இரண்டு பேருக்கும் இடையில் 16 வருடங்கள் வித்தியாசம் உள்ளது. குறிப்பிட்ட காலம் வரை நான் தான் அவளது அக்கா எனச் சொல்லாமல் வளர்த்து வந்தோம். நான் சினிமாவில் இருப்பதால் எனது பெற்றோர்கள், இது உன்னுடைய வாழ்க்கை. எங்களை அதில் அதிகம் ஈடுபடுத்தாதே என அடிக்கடி கூறுவார்கள். எனது தங்கச்சி நினைப்பதெல்லாம் அவளுக்கு இப்போது கிடைக்கும். ஆனால் அப்படி அவள் ஆசைப்படுவது அனைத்தும் அவளுக்கு எளிதாக கிடைக்க கூடாது என நான் நினைப்பேன்.

காரணம்: நான் இப்படி சொல்லக் காரணம், நான் ஆசைப்பட்ட அனைத்தையும் போராடிப் பெற்றேன். எதுவும் எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. நான் இந்த நிலைமைக்கு வளர்ந்ததற்கு காரணம் நான் ஆசைப்படும் அனைத்தையும் போராடி காத்திருந்து பெற்ற சூழலில் வளர்க்கப்பட்டது தான். எனது தங்கச்சியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், அவளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆனதும், நான் அவளுக்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் செய்வேன், அவளுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடங்கி ஆதரவும் கொடுப்பேன்" என பேசியுள்ளார். ராஷ்மிகா மந்தனா தனது தங்கை குறித்து மனம் திறந்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
