ARTICLE AD BOX
Puducherry Style Vendakkai Masala Curry : புதுச்சேரியின் உணவுகளுக்கு எப்போதுமே அலாதி தனித்துவம் உண்டு. அதற்கு காரணம், அவர்களின் கைப்பக்குவத்தில் சில மாறுதல் இருக்கும். அந்த வகையில் புதுச்சேரிக்கு என்று அடையாளமான உணவுகளில் ஒன்று தான், ‘புதுச்சேரி ஸ்பெஷ் வெண்டைக்காய் மசாலா கறி’. எளிமையான இந்த உணவு, துணை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி உண்ணும் விருப்ப உணவாக, புதுச்சேரியில் இந்த உணவு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சுத்தமான சைவ உணவான ஸ்பெஷ் வெண்டைக்காய் மசாலா கறி தயாரிப்பது மிக எளிது, அதற்கான பொருட்கள் என்ன? எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
புதுச்சேிர ஸ்பெஷ் வெண்டைக்காய் மசாலா கறி தயாரிக்க தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய் – 250 கிராம் (சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டவும்)
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
- இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
- кориந்தப்பொடி – 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – 1/2 கப் (விழுதாக அரைத்தது)
- கருவேப்பிலை – சில
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- கொத்தமல்லி இலைகள்
மேலும் படிக்க | Puducherry Snails Fry : ‘சத்தானது.. முத்தானது..’ புதுச்சேரி ஸ்பெஷல் நத்தை வறுவல் செய்வது எப்படி?
புதுச்சேரி ஸ்பெஷ் வெண்டைக்காய் மசாலா கறி செய்முறை:
சூடான அடுப்பில் கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் வெண்டைக்காயை அதில் போட்டு, வறுக்கவும். வெண்டைக்காய் பொன்னிறமாக மாறும் வரை, கவனமாக கவனிக்கவும். வெண்டைக்காய் நிறம் மாறியதும், அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றவும். அதன் பின், அதில் கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் கிள்ளிய பச்சை மிளகாய் துண்டுகளை கடாயில் போட்டு, சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை கவனமாக வதக்கவும். அதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்றாக மெலிவாக குழையும்வரை வதக்கவும். அதன் பின் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லிப் பொடி வதக்கவும். பொடி நன்கு வதங்கியதும், தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து அதனுடன் கலக்கவும்.
இப்போது வெண்டைக்காயை மசாலாவில் சேர்த்து நன்கு கலக்கவும். வெண்டைக்காயும், மசாலாவும் நன்கு ஒட்டும் படி, கலவை இருக்க வேண்டும். இப்போது தேவையான அளவு தண்ணீரை அதனுடன் சேர்க்கவும். மிதமான தீயில் அடுப்பை எரியவிட்டு, 7 நிமிடங்கள் வேகவிடவும். இறுதியில் அரைத்து வைத்த தேங்காய் கரைசலை, அதனுடன் சேர்க்கவும். இப்போது கூடுதலாக 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். மசாலா ரெடியானதும், அதன் மீது கொத்து மல்லியை தூவிவிடவும். இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதுச்சேரி ஸ்பெஷ் வெண்டைக்காய் மசாலா கறி தயார்.
