ARTICLE AD BOX
புதுச்சேரி இறால் சாதம், பாண்டி ப்ரான் ரைஸ் இதை நீங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் வைத்துக்கொடுத்தீர்கள் என்றால் தினமும் மிச்சம் வைக்கும் குழந்தைகள் கூட மொத்தமாக காலி செய்து விடுவார்கள். இதை உங்கள் குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் நண்பர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்கள் சுற்றுலா செல்லும்போதும் செய்து எடுத்துக்கொண்டு செல்லலாம்.
தேவையான பொருட்கள்
• இறால் – கால் கிலோ
• பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
• தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
• பூண்டு – 10 பல்
• சோம்பு – ஒரு ஸ்பூன்
• மிளகு – அரை ஸ்பூன்
• பச்சை மிளகாய் – 2 (கீறியது)
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
• எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• முட்டை – 2 (அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
• வடித்த சாதம் – 4 கப்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை
இறாலை சுத்தம் செய்துவிட்டு, அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடித்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளியை சேர்த்து நன்றாக மசிய வதக்கவேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சோம்பு, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம், தக்காளி வெந்தவுடன், அதில் இறால் சேர்த்து வதக்கவேண்டும். அது பிங்க் நிறத்தில் மாறியதும், அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்ததாக உடைத்து, அடித்த முட்டைகளை சேர்த்து கிளறவேண்டும். முட்டை நன்றாக பொரிந்து வந்தவுடன், அடுப்பை அனைத்துவிட்டு, வடித்த சாதத்தை இறால் மசாலாவில் சேர்த்து கிளறவேண்டும்.
சாதத்துடன் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறி மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சூப்பர் சுவையான புதுச்சேரி இறால் ரைஸ் தயார். இதற்கு தனியாக தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. உங்களுக்கு தேவைப்பட்டால் ரைத்தாவுடன் பரிமாறிக்கொள்ளலாம்.
இதை உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் வைத்து கொடுத்துவிட்டீர்கள் என்றால், அவர்கள் அதை முழுவதும் காலி செய்து எடுத்து வருவார்கள். வழக்கமாக என்ன கொடுத்துவிட்டாலும் சாப்பிடாத குழந்தைகள் கூட லன்ச் பாக்ஸை காலி செய்து எடுத்து வருவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் உள்ள பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த சாதத்தை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் சுவைக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை ருசித்து சாப்பிட்டு பாருங்கள். அடிக்கடி செய்வீர்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்