சென்னை அருகே மாமல்லபுரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர். அப்போது, விஜய் ஒரு தலைவர் இல்லை என அவர் பேசினார். அப்படி என்னதாக சொன்னார் பிரஷாந்த்.? பார்ப்போம்.

விஜய் பற்றி என்ன பேசினார் பிரஷாந்த் கிஷோர்.?

தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், தான் தேர்தல் வியூகம் வகுப்பதிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டதாகவும், 4 வருடங்களுக்குப் பிறகு தான் இங்கு வந்தது விஜய்க்கு உதவுவதற்காக இல்லை என்றும் தெரிவித்தார். தவெகவிற்கு தேர்தல் வியூகம் வகுக்க தான் வரவில்லை என்றும், அது அவர்களுக்கு தேவையும் இல்லை என்றும் கூறினார்.

எந்த அரசியல் தலைவருக்காகவும் நான் வேலை செய்யப் போவதில்லை என்று தெரிவித்திருந்தேன், ஆனால் விஜய் ஒரு தலைவர் இல்லை என கூறி தொண்டர்களை பதற வைத்த அவர், என்னைப் பொறுத்தவரை எனது நண்பர், சகோதரர் விஜய் ஒரு அரசியல் தலைவர் இல்லை, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை என கூறி, பதறிய அதே தொண்டர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.

அதேபோல், என்னைப் பொறுத்தவரை, தவெக ஒரு கட்சி அல்ல, தமிழ்நாட்டில் புதிய அரசியல் களத்தை தொங்கி வைக்க வந்த, லட்சக்கணக்கானோர் அடங்கிய ஒரு இயக்கம் என தெரிவித்தார் பிரஷாந்த் கிஷோர்.