Prabhu Deva Concert: 'நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன், ஆனா...' - பிரபு தேவா குறித்து வடிவேலு

2 hours ago
ARTICLE AD BOX
நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம்( பிப்ரவரி 22) பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று வைப் செய்திருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கரகோஷத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்திருகின்றனர். ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறார். பிரபு தேவாவின் மகன், சாண்டி மாஸ்டர், நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், பார்வதி நாயர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் நடனமாடி இருக்கின்றனர்.

நடன நிகழ்ச்சி

நடிகர் தனுஷ், வடிவேலு, S.J சூர்யா, பாக்கியராஜ், நடிகைகள் ரம்பா, மீனா, ரோஜா, சங்கீதா உள்ளிட்டோர் இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர். இதில் ரௌடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் , காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்திருக்கிறது. மேலும் பிரபுதேவாவும், வடிவேலும் இணைந்து 'பேட்டை ராப்' வீடியோவிற்கு வைப் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, "இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன். ஆனால் வாய்க்குள்ள விரல்ல விட்டு ஆட்டிகிட்டு இருக்காரு. இப்படித்தான் சூட்டிங்லையும் பண்ணுவாரு. அதற்கு ரோஜாதான் சாட்சி. உண்மையிலேயே தமிழ் நாட்டிற்கு கிடைச்ச வரப்பிரசாதம். இந்தியாவிற்கு கிடைச்ச மைக்கல் ஜாக்‌ஷன் இவரு.

நடன நிகழ்ச்சி

நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம்னு, ஜெயலலிதா அம்மாவே சொல்லிருக்காங்க. உங்களை மாதிரியே நானும் இந்த நிகழ்ச்சியை நேரில பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இவரு என்னைய கூப்டாம இருந்தா நான் ரொம்ப கோபப்பட்டிருப்பேன். ஆனா நீங்க வந்தே ஆகணும்னு சொல்லிட்டாரு. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article