Planet Parade: சூரிய குடும்பத்தில் உள்ள 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அறிய வானியல் நிகழ்வை, எங்கு? எப்படி? காண முடியும் என்ற விவரங்களை இங்கே அறியலாம்.

கிரகண அணிவகுப்பு:

வானியல் ஆராய்ச்சி என்பதே பல அதிசயங்கள் நிறைந்தது தான். எளிதில் காண முடியாத, கணிக்க முடியாத பல நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மேலும் ஒரு ஆச்சரியமாக தான், பிப்ரவரி 28 ஆம் தேதி வானத்தில் ஒரு அரிய காட்சி காண கிடைக்க உள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் சூரிய மண்டலத்தின் அனைத்து கோள்களும் விண்வெளியில் ஒன்றாக அணிவகுத்துச் செல்வதைக் காணலாம். அதாவது அனைத்து கோள்களும் ஒரு நேர்கோட்டில் தெரியும். இந்த தனித்துவமான நிகழ்வை கிரக அணிவகுப்பு என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

15 ஆண்டுகால காத்திருப்பு:

விண்வெளியில் நடக்கும் இந்த நிகழ்வு மிகவும் அரிதானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அரிய தற்செயல் நிகழ்வைக் காணும் வாய்ப்பை இழந்துவிட்டால், அதனை மீண்டும் காண 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிப்ரவரி 28 அன்று வானிலை தெளிவாக இருந்தால், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் தவிர அனைத்து கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

ஏன் சிறப்பு வாய்ந்தது?

நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அனைத்து கோள்களும் சூரியனின் ஒரு பக்கத்தில் ஒரு நேர்கோட்டில் சீரமைக்கப்படும்போது, அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல் நமக்குத் தோன்றும், இது கிரக அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த கிரக அணிவகுப்பில் வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் சனி போன்ற கிரகங்களை மட்டுமே நம்மால் காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களைப் பார்க்க ஒரு தொலைநோக்கி தேவை. பூமியிலிருந்து அதிக தூரம் இருப்பதால், அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த கிரக அணிவகுப்பில் மூன்று முதல் எட்டு கிரகங்கள் இடம்பெறும்.

இந்தியாவில் கிரகங்களின் அணிவகுப்பை எங்கே காணலாம்?

இந்தக் காட்சியை இந்தியாவில் இருந்தபடி காண விரும்பினால், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் இதைக் காணலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அற்புதமான வானியல் நிகழ்வைக் காண, நகரத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு திறந்தவெளிக்குச் செல்ல வேண்டும், அங்கிருந்து இந்தக் காட்சி தெளிவாகத் தெரியும். வானிலை தெளிவாக இல்லை என்றால், இந்த அரிய தற்செயல் நிகழ்வை தொலைநோக்கியின் உதவியுடன் காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, கடந்த மாதம் ஜனவரி 21 முதல் 29 வரை வானத்தில் வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை இணைந்திருந்ததன் மூலம் தொடங்கிய கிரக அணிவகுப்பின் உச்சக்கட்டம் இன்று நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது.