ARTICLE AD BOX
PI காயின் விலை கிட்டத்தட்ட 300% வரை உயர்வு!. இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம்?
கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றாக ஆதிக்கம் செலுத்தப்படும் என அறியப்பட்ட PI காயின் விலை இப்பொழுது 300% உயர்வு ஏற்றம் கண்டுள்ளது. பை நெட்வொர்க்கால் உருவாக்கப்பட்ட பை நாணயம், கடந்த பிப்ரவரி 20 அன்று 1.84 டாலருக்கு (சுமார் ரூ. 160) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிப்டோ மார்கெட்டில் ஹிட் அடித்த பை நெட்வொர்க் காயின், கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வந்தது.
இந்தநிலையில், பை காயின் (Pi Coin) அதன் சமீபத்திய Open Mainnet துவக்கத்திலிருந்து 290% க்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதன் விலை $2.16 ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக பிட்காயின் (Bitcoin) மற்றும் எத்தெரியம் (Ethereum) போன்ற முக்கிய கிரிப்டோகரன்சிகளை பை நாணயம் மிஞ்சியுள்ளது. பை நாணயத்தின் அதிரடி ஏற்றம், பிட்காயின், எத்தெரியம் மற்றும் டோகோயின்( Dogecoin) போன்ற முக்கியமான நிறுவனங்களைவிட முன்னிலையில் உள்ளது. இந்த மூன்று க்ரிப்டோகரன்சிகளும் கடந்த வாரத்தில் 9-20% வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

ஓபன் மெயின்நெட் வெளியீடு இப்போது பயனர்கள் தங்கள் பை நாணயங்களை பை நெட்வொர்க்கிற்கு வெளியே மாற்ற அனுமதிக்கிறது, இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மைல்கல் ஆகும். கூடுதலாக, OKX, Bitget மற்றும் CoinDCX உள்ளிட்ட முக்கிய பரிமாற்றங்களில் அதன் பட்டியலிடல், அணுகல் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி நிலையானதா, அல்லது பை காயின் என்பது மற்றொரு Crypto Bubble என்று கேள்வி எழுந்துள்ளது. Crypto Bubble என்பது கிரிப்டோகரன்சிகளின் மதிப்புகள் திடீரென உயர்ந்து, பின்னர் மிக விரைவாக விழும் பரபரப்பான சந்தை நிலை. Bubble மதிப்பில் வீழ்ச்சி ஏற்படும் போது, பல முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
பை நாணயத்தின் வளர்ச்சிக்கு என்ன காரணம்: Open Mainnet அறிமுகம் Pi Coin-இன் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. ஏனென்றால், பை நாணயங்களை மூடிய நெட்வொர்க்கிற்கு வெளியே முதல் முறையாக வர்த்தகம் செய்ய அனுமதித்தது. இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது மற்றும் சந்தை செயல்பாட்டைத் தூண்டியுள்ளது.
வளர்ந்து வரும் பரிமாற்றப் பட்டியல்கள்: தற்போது பல பிளாட்பார்ம்கள் Pi Coin-ஐ ஆதரிக்கின்றன, இதனால் பரிவர்த்தகர்கள் எளிதில் வாங்கவும் விற்கவும் முடிகின்றது. அதிகமான அணுகல் வாய்ப்பு, இந்த உயர்ந்த ஈர்ப்பு, Pi Coin-இன் விலை அதிகரிப்புக்கும், முதலீட்டாளர்களின் ஈர்ப்பையையும் அதிகரிக்கும்.
வலுவான சமுதாய ஆதரவு (Strong Community Support ): Pi Network 60 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும் தனது நிலையான பின்தொடர்பவர்களை உருவாக்கியுள்ளது. இந்த பயனர்களின் ஆதரவு, சந்தை வீழ்ச்சிகளுக்கு எதிராக நிலைத்தன்மை (resilience) ஏற்படுத்தி, Pi Coin-ஐ பாதுகாக்க உதவியுள்ளது.
Limited டோக்கன் சப்ளை: Pi Coins-ஐப் பற்றி ஒரு முக்கியமான பகுதி எதுவும் திறக்கப்படவில்லை. தேவை அதிகரித்தாலும், கிடைக்கும் சப்ளை குறைவாக இருப்பதாலும், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சில முதலீட்டாளர்கள் இதை, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாகக் கருதினாலும், விமர்சகர்களிடையே அதன் சந்தை அமைப்பு மற்றும் சட்டபூர்வமான தன்மை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், பல நிபுணர்கள் அதன் விலை வரும் காலத்தில் கடுமையாக உயரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.