ARTICLE AD BOX

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு PF என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு முக்கிய சேமிப்பாக உள்ளது. ஆனால் PF இருப்பு குறித்து விவரம் அறிந்து கொள்ள அவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஆனால் தற்போது, வேலை பார்க்கும் நிறுவனம் pf பணத்தை டெபாசிட் செய்கிறதா? இல்லையா?, எவ்வளவு வட்டி பெறப்படுகிறது, பழைய கணக்கிற்கு என்ன ஆனது, பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்ற பல விவரங்களை நம்மால் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.
இதையெல்லாம் நீங்கள் ஒரு SMS மூலம் அறியலாம். அதாவது உங்கள் PFகணக்கு பற்றிய தகவலை SMS மூலம் பெற விரும்பினால் 773829899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து EPFOHO UAN ENG என்று தட்டச்சு செய்து கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இங்கு ENG என்பது ஆங்கில மொழியை குறிக்கிறது. உங்களுக்கு தமிழ் மொழி வேண்டும் என்றால் TAM என்று குறிப்பிடலாம். இந்த வசதி தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, குஜராத், மராத்தி, இந்தி உட்பட 5 மொழிகளில் உள்ளது.