ARTICLE AD BOX
Perusu Movie Review: நடிகர் வைபவ் மற்றும் சுனில் நடிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் இன்று மார்ச் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் பெருசு. இது அடல்ட் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.இறந்து போன தந்தையை வைத்து அட இப்படி எல்லாம் பிரச்சனை வருமா என்ற கோணத்தில் ஒரு அடல்ட் காமெடி படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப் படம் மக்களைக் கவர்ந்ததா இல்லையா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பெருசு படத்தின் கதை
ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழும் 2 பெண்டாட்டி காரர் பெருசு. இவரது முதல் மக்ன் சாமிக்கண்ணு குடும்ப பொறுப்பை உணர்ந்தவர். இரண்டாம் மகன் துரை குடிப்பது மட்டுமே வேலை என்பது போன்ற கதாப்பாத்திரம்.
கதைக்கு வருவோம். ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு வரும் பெருசு திடீரென இறந்து போகிறார். இது குடும்பத்தினருக்கு தெரிய வந்தாலும், உற்றார் உறவினருக்கு சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அது என்ன நிலை, வெளியே சொல்ல பயப்படும் அளவிற்கு பெருசுக்கு என்ன நடந்தது என்பது தான் கதை.
அடெல்ட் காமெடி
படம் ஏ சர்ட்டிபிகேட் வாங்கியதால், ஏகப்பட்ட இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் தான். இதில் பல இடங்களில் காமெடி என்ற பெயரில் பேசிக் கொண்டே இருப்பது அலுப்பைத் தருகிறது. சில காட்சிகள் படத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல உள்ளது. படம் என்ன தான் காமெடியாக இருந்தாலும் இந்தப் படத்தில் பெரும்பாலானவை சிரிக்கும் படியாக அமையவில்லை என்பதே உண்மை.
ஒட்டாத கதை
ஊரில் உள்ளவர்களுக்கு விஷயத்தை சொல்லாமல் இறுதிச் சடங்கை நடத்த குடும்பத்தினர் போடும் திட்டம் என்ன, அவரது இறப்பு குடும்பத்தினருக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை இயக்குநர் சொல்ல வந்தாலும், பெரும்பாலான இடங்கள் கதைக்கு ஒட்டாமலே இருக்கிறது.
ஏகப்பட்ட நடிகர்கள்
அதுமட்டுமின்றி, படத்தில் வைபவ், சுனிலை தவிர பாலசரவணன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, விடி கணேஷ், நிஹாரிகா, சாந்தினி, தனம், சுபத்ரா, சுவாமிநாதன் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டிற்குள் நடப்பது போல இருப்பதால், அவையும் ஒருவகையில் அழுப்பை தருகிறது.
ஓவர் டோஸ்
படம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நகர்ந்தாலும், அதிகப்படியான காமெடியன்கள் படத்தில் இருப்பதால், அது ஓவர் டோசேஜ் ஆகி ஒர்க் அவுட் ஆகாமலே போனதுடன் முகம் சுழிக்கவும் வைக்கிறது. படத்தின் பாடல்கள் எதுவும் ஈர்க்கும் படியாக அமையவில்லை. 2 பெண்டாட்டிகாரரின் பெருமையை தேடி அலையும் மகன்கள் உண்மையில் எது பெருமை என்பதை தெரியாமலே இருப்பதாகவே நமக்கு தெரிகிறது.
மேலும் படிக்க: சொன்ன தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆன எமெர்ஜெண்சி படம்..
ஏமாற்றம்
இந்த தலைமுறையினர் எல்லாம் வெளிப்படையாக பேச ஆரம்பித்த நிலையிலும் இந்தப் படத்தில் உள்ள சில வார்த்தைகள் இன்னும் மெச்சூரிட்டி அடையாத நபர்களை பற்றி தான் சுட்டிக் காட்டுகிறது.
இந்தப் படத்தில் உள்ள சில ரிப்பீட்டட் வசனங்களை எடுத்துவிட்டால், குறும்படத்திற்கான கதை போல இருக்கிறது. சொல்ல வந்த கதைக்கான வசனங்கள் இல்லாமல், காமெடி வசனங்களை மட்டுமே நம்பி படம் உள்ளதால் பார்வையாளர்களுக்கு படம் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தான் அளிக்கிறது.

டாபிக்ஸ்