ARTICLE AD BOX
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீசன் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோடு குறித்த அப்டேட்டை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், கதிர் நல்லவன் என்று பாண்டியன் பேசுவதோடு தொடங்குகிறது. பொய் சொல்ல கூடாது, திருட கூடாது என்ற ஒரு கட்டுக்கோப்புடன் தான் நான் எல்லோரையும் வளர்த்திருக்கிறேன் என்று பாண்டியனும், கோமதியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து தான் ராஜீ தனது கணவர் கதிரைப் பற்றி பாண்டியனிடம் பேசுகிறார். ஏன் பாசமில்லாமல் இருக்கிறீங்க, என எமோஷ்னலாக பேசுகிறார்.

அதற்கு எந்த பதிலும் சொல்லாத பாண்டியன், கதிரிடம் உன் மீது அப்பா பாசமாகத்தாண்டா இருக்கிறேன். நீ எதிர்த்து எதிர்த்து பேசும் போது தான் உன்னை நான் அடித்திருக்கிறேன். உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் என்று சொல்ல, அதற்கு கதிர், ராஜீ போலீசாக வேண்டும். அது அவளது சிறிய வயது ஆசை. அவர்களது வீட்டில் யாரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நீங்கள் அதற்கு மட்டும் அனுமதி கொடுங்கள் என்று கேட்கவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாண்டியன் எனக்கு எது பிடிக்காதோ, அதையே தான் நீ கேட்ப இல்ல, மீண்டும் கோபமாகிறார்.
நகை விஷயத்தில் வெளியே வந்த உண்மை - பாண்டியனிடம் ராஜீ கேட்ட கேள்வி? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

உன்கிட்டலாம் பேச முடியாது என்று சொல்லிவிட்டு மீண்டும் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பழனிவேல் மற்றும் சுகன்யாவின் விவாதம் தொடங்குகிறது. பகலில் ஒவ்வொரு ரூமாக தேட வேண்டியிருக்கிறது. ஏதோ வாடகைக்கு வந்த வீட்டில் இருப்பது போல் இருப்பதாகவும். எந்த ரூம் காலியாக இருக்கிறதோ அங்கு தான் நான் தூங்க வேண்டியிருக்கிறது என கூறுகிறார். சினிமாவுக்கு போனும், அப்படியே எங்களது வீட்டிற்கும் போக வேண்டும். என்னை கூட்டி போங்க என்று பழனிவேலுடம் சொல்கிறார்.

அதற்கு பழனிவேல் சீக்கிரம் ரூம் கட்ட சொல்கிறேன். படத்துக்கு வேண்டுமென்றால் நாளைக்கு போவோம் என சொல்கிறார். ஆனால், வீட்டிற்கு இப்போது போக முடியாது என்று பழனிவேல் சொல்ல, அதற்கு படத்துக்கு நாளைக்கு கூட்டிட்டு போவீங்களா இல்லை ஏமாற்றிவிடுவீர்களா என்று கேட்க, கண்டிப்பாக கூட்டிட்டு போறேன் என்று வாக்கு கொடுக்கிறார். அப்படியே சுகன்யா தூங்க செல்ல, நீங்க தூங்கினால் தூங்குங்க இல்லை என்றால் அப்படியே இருங்க, ஆனால் குரட்டை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்று சொல்கிறார்.

அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. நாளைய தினம் பழனிவேல் தனது மனைவி சுகன்யாவை கூட்டி சென்றாரா இல்லையா? அதற்கு தனது மச்சானிடம் என்ன சொல்லி பெர்மிஷன் கேட்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.