ARTICLE AD BOX
இன்றைய தினம், கதிரவனை தேடி போலீஸ் வீட்டுக்கு வந்த நிலையில், கோமதிக்கு எல்லா உண்மைகளும் தெரியவருகிறது. இதுகுறித்த அப்டேட்டை தற்போது பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ஆவது சீசனில் இன்றைய எபிசோடில், பழனிவேலுவின் திருமண வாழ்க்கை பற்றிய காட்சிகளுடன் தொடங்குகிறது. வெறும் 12 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு எம்.ஏ. வரை படித்திருக்கிறேன் என்று பாண்டியன் குடும்பத்தில் பொய் சொல்லி சரவணனை திருமணம் செய்த தங்கமயில் இப்போது ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்கிறேன் என்று பொய்யோடு வாழ்ந்து வருகிறார்.

இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி ஏமாற்றிக் கொண்டே இருப்பார் என்பது குறித்து இயக்குநர் தான் சொல்லவேண்டும். இதற்காக தங்கமயில் தனது அம்மாவிடம் சண்டையும் போட்டுள்ளார். கடந்தஒரு வாரமாக மயிலின் குடும்பம் பற்றிய டாப்பிக் வரவில்லை. ஆனால், இன்றைய எபிசோடில் நீ வேலைக்கு போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு நம்ம வீட்டிற்கு வந்துவிடு என்று அவரது அம்மா அறிவுரை வழங்குகிறார். ஆனால், நிரந்தரமாக மட்டும் வந்துவிடாதே என்று கண்ணீர்மல்க பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து மீனாவின் திருமண வாழ்க்கை குறித்து அவரது அப்பா கேட்கிறார். அதெல்லாம் தாம்பூலத்தில் தான் தாங்கவில்லை. மற்றபடி எல்லாருமே என்னை நல்லாத்தான் பாத்துக்குறாங்க அப்படினு சொல்கிறார். இதைத் தொடர்ந்து பழனிவேல் கடையில் தூங்குவது குறித்து பாண்டியனும், கோமதியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னர் யாரும் எதிர்பாராத நேர்த்தில் பாண்டியன் வீட்டிற்கு போலீஸ் வாகனம் வந்து நிற்கிறது. உடனே அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் வீட்டிற்கு வெளியில் வரவே, இங்கு கதிர் யார் என்று கேட்க, நகை காணாமல் போனது பற்றி புகார் கொடுத்தது நீங்கள்தானே என்று கேட்கிறார் காவல்துறை ஆய்வாளர். உடனே ராஜீயும் கதிருக்கு போன் செய்து விஷயம் குறித்து சொல்லி அவரை உடனே வீட்டிற்கு வர சொல்கிறார். கடைசியாக கோமதியிடம் ராஜீ மற்றும் மீனா இருவரும் நடந்த எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கிறார்கள். அதோடு இன்றைய எபிசோடும் முடிகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா ஷாலினி? புது சேனலுக்கு தாவியதால் ஏற்பட்ட குழப்பம்!

இதையெல்லாம் தங்களது வீட்டிற்கு வெளியிலிருந்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜீக்கு அவரது நகை திரும்ப கிடைக்குமா? அப்படி கிடைக்கும்பட்சத்தில் அந்த நகையை ராஜீயின் அப்பாவிடமே திரும்ப கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் பாண்டியனுக்கு எல்லா உண்மையும் தெரிய வருமா? என்பது குறித்த இன்னும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு நாளை வரை காத்திருப்போம்…