ARTICLE AD BOX
பாண்டியன் ஸ்டோர்ஸ்சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பாவிற்கு Cardiac Arrest ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அதைக் கேட்டு மீனாவின் குடும்பமே கதறும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசனுக்கு கிடைத்தவரவேற்புக்கு பிறகு, இந்த தொடரின் 2ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 சீசன்களுக்கும் பெரியளவில் வேறுபாடு ஒன்றும் கிடையாது. முதல் சீசனில் அண்ணன் தம்பி கான்செப்ட், அவர்களுக்கு திருமணம். அதன் பின்னும் ஏற்பாடு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது காட்டப்பட்டது.

2ஆவது சீசனில் அப்பா - மகன் கான்செப்ட் அவர்களது திருமணம். மருமகள்களும் இடையே எப்படி குடும்பம் ஒத்துமையாக இருக்கிறது என்பது தான். இதில் சரவணன் மட்டுமே வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். மற்ற இருவரும் காதலித்தும் மற்றும் கட்டாயத்தின் பேரிலும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடைசியாக கோமதியின் சகோதரன் பழனிவேலுக்கும் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு பழனிவேல் தனது அண்ணன்களின் வீட்டிற்கு சென்ற நிலையில், அவர்களது சுயரூபம் தெரிந்து கோமதியின் வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஆனால், பழனிவேலுவின் மனைவி சுகன்யாவிற்கு அவர்களது வீடு பிடிக்கவில்லை. சின்ன ரூம், கட்டில் மெத்தை எல்லாம் பழசு என்று குற்றம் சாட்டுகிறார். வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த சுகன்யா தனது லக்கேஜை முதலில் டைனிங் டேபிளுக்கு அடியில் வைத்தார். அதன் பிறகு தான் பாண்டியன் தான் தங்கியிருந்த அறையை அவர்களுக்கு விட்டுக் கொடுத்தார்.
கடையில் பொட்டலம் போடுறான்; அவனுக்கு நிச்சயமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அண்ணன்கள் வைத்த டுவிஸ்ட்!

இந்த நிலையில் இன்றிய எபிசோடில் பழனிவேல் மற்றும் சுகன்யா இருவரது காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில், சுகன்யா இரவில் தான் என்ன பேசினோம் என்று தெரியாதவர் போன்று நார்மலாகவும், சகஜமாகவும் அனைவரிடமும் பேசுகிறார். அதன் பிறகு தான் இன்றைய எபிசோடில் டுவிஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. அது வேறொன்றுமில்லை. மீனாவின் அம்மாவிடமிருந்து போன் வருகிறது. அதில் திரும்ப திரும்ப உடம்பு சரியில்லை என்று சொல்கிறார் மீனாவின் அம்மா. கடைசியாக மீனாவின் அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு Cardiac Arrest ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியதாக சொல்கிறார்.

இதைக் கேட்ட மீனா கதறி துடிக்கஅவரது குடும்பத்தினரும் பதற்றமடைந்து அழ ஆரம்பிக்கின்றனர். இதைத் தொடர்ந்து மீனாவை அழைத்துக் கொண்டு செந்தில் மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஆனால், இதே போன்று முதல் சீசனிலும் மீனாவின் அப்பாவிற்கு Cardiac Arrest ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது அவர்களுக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸை செந்தில் தான் கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து மீண்டும் அரைத்த மாவையே அரைக்கிறீங்களே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.