ARTICLE AD BOX
Pandian stores 2: நாக்கை இழுத்து வச்சி அறுத்துடுவேன்.. பொங்கிய பாண்டியன்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து சிறப்பான மற்றும் ரசிகர்களை கவரும் வகையிலான எபிசோட்களை கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பழனிவேலின் திருமணம் அதிரடியாக நடந்து முடிந்துள்ளது. பாண்டியன் நிச்சயித்த பெண்ணுடன் அவரது திருமணம் நடக்காமல் நின்று போன நிலையில் முத்துவேல் மற்றும் சக்திவேல் கொண்டு வந்த சுகன்யாவுடன் பழனிவேலுக்கு திருமணம் நடக்கிறது.
இதனால் பழனிவேலின் வாழ்க்கை குழப்பமாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கணிக்கப்பட்ட விஷயங்கள் இந்த பிரமோவில் காணப்படுகிறது அடுத்தடுத்து பல திருப்பங்களை இந்த சீரியல் கொடுத்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களாகவே அதிரடி கிளம்பி வருகிறது. இந்த சீரியலின் முதல் சீசன் நிறைவடைந்த சில தினங்களில் இரண்டாவது சீசனும் துவங்கப்பட்டு அதிரடி சரவெடியாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறியுள்ளது. முதல் பாகத்தில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களத்தை கொடுத்திருந்த இயக்குநர் இந்த சீசனில் அப்பா மற்றும் மகன்களின் உறவு பாலத்தை செம்மைப்படுத்தி வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவருகிறது.
பழனிவேல் திருமணம்: கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பாண்டியனின் மச்சான் பழனிவேலின் திருமணம் அதிரடியாக நடந்து முடிந்தது. பாண்டியன் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவரது அண்ணன்கள் ஏறுக்கு மாறான விஷயங்களை கூறி அந்த திருமணத்தை நிறுத்துகின்றனர். மேலும் அதே முகூர்த்தத்தில் தாங்கள் பார்த்து வைத்த பெண்ணை பழனிவேலுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனிடையே உண்மையை தெரிந்து கொண்ட பழனிவேல் தன்னுடைய மச்சான் மற்றும் அக்காவின் வீட்டிற்கு தன்னுடைய மனைவியுடன் செல்கிறார். இதை பிடிக்காத அவரது மனைவி சுகன்யா அடுத்தடுத்து சதி வேலைகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.
இந்த வார பிரமோ: இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவை சேனல் தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக ராஜியின் நகைகளை திருடிக் கொண்டு கண்ணன் சென்ற நிலையில் அந்த பழி கதிர் மீது விழுகிறது. இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்திருந்த நிலையில் போலீசார் பாண்டியன் வீட்டிற்கு வருகின்றனர். இதனால் கண்ணன் தான் தன்னுடைய நகைகளை திருடி சென்றார் என்று ராஜி உண்மையை கூறுகிறார். உண்மையை தெரிந்து கொண்ட பாண்டியன், இதை ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா முத்துவேல் மற்றும் சக்திவேலிடம் சென்று அதிரடியாக வெளிப்படுத்துகிறார்.
தெரியவந்த உண்மை: தன் மகனை திருடன் என்று இனிமேல் யாராவது கூறினால் நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவேன் என்றும் அவர் கத்தி பேசுகிறார். இதன் மூலம் தன் மகன் திருடன் இல்லை என்ற பெருமிதம் அவரது பேச்சில் வெளிப்படுகிறது. இவ்வாறாக இந்த வார பிரமோ காணப்பட்டது. இந்த சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் சேனலில் இரண்டாவது இடத்தை அதிக டிஆர்பியுடன் பிடிந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அடுத்தடுத்த சுவாரஸ்யமான எபிசோடுகளை கொடுத்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.