Pakistan Cricket Board Loss: கப்புதான் ஜெயிக்கல.. கல்லாவும் கட்டலையா.? நெருக்கடியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

1 day ago
ARTICLE AD BOX

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 860 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நெருக்கடியில் சிக்கியுள்ள வாரியம், வீரர்களின் ஊதியத்தில் கை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரும் நஷ்டத்தை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், அபாரமாக ஆடி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், இந்த முறை போட்டிகளை நடத்திய பாகிஸ்தான், அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல், போட்டியிலிருந்து வெளியேறியது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்காக, 40 மில்லியன் டாலர்களை பாகிஸ்தான் செலவிட்டுள்ளது. அதோடு, கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை புதுப்பிக்க 18 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொடரை நடத்தியதில், டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் அவர்களுக்கு கிடைத்த வருமானமோ, வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டும்தான் என கூறப்படுகிறது.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு, இந்த சாம்பியன்ஸ் கோப்பை மூலம், சுமார் 85 மில்லியன் டாலர்கள் அளவிற்கு, அதாவது இந்திய மதிப்பின்படி, 860 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வீரர்களின் ஊதியத்தில் கை வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

சாம்பியன்ஸ் டிராபி மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் அடிமடியில் கை வைத்துள்ளதாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். ஆம், சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை 90% வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல், இருப்பில் உள்ள வீரர்களின் சம்பளத்தையும் சுமார் 88% வரை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதேபோல், போட்டிக்காக வெளியே செல்லும் வீரர்களை, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்காமல், அதற்கும் குறைந்த அளவிலான ஹோட்டல்களில் தங்க வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் நஷ்டத்திற்கு இந்தியாவும் காரணமா.?

சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, போட்டிகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை அந்நாடு சந்தித்தது. ஏனெனில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தது. இதனால், இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதோடு, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றதால், தொடரை நடத்தும் பாகிஸ்தானில் இறுதிப் போட்டி நடைபெறாமல், துபாயில் நடைபெற்றதும், வருமானம் குறைந்ததற்கு ஒரு காரணமாக அமைந்தது.

போட்டிகளை நடத்தும் பாகிஸ்தான் அணி, ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல், லீக் சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேறியதும், இந்திய அணி அங்கு விளையாடாததும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனாலேயே, பெருத்த நஷ்டத்தை சந்தித்து, தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Read Entire Article