ARTICLE AD BOX
சொந்த மண்ணில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஐ.சி.சி தொடரில், குரூப் A-ல் சாம்பியன்ஸ் டிராபி நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இரு லீக் போட்டிகளிலும் (நியூசிலாந்து, இந்தியா) மோசமாகத் தோற்றது. இதனால், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை முதல் அணியாக பாகிஸ்தான் இழந்தது. இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் பாகிஸ்தான் ரசிகர்கள், தங்கள் நாடு ஆறுதல் வெற்றியாவது பெரும் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் vs பங்களாதேஷ் போட்டிக்கு தயாராகினர். பாகிஸ்தானைப்போலவே, தனது முதல் இரு போட்டிகளிலும் (இந்தியா, நியூசிலாந்து) தோற்றதால் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் எனக் காத்திருந்தது வங்கதேசம்.
அதன்படி, இவ்விரு அணிகளும் வெற்றியோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரை நிறைவு செய்ய வேண்டும் என தங்களின் கடைசி லீக் போட்டிக்கு இன்று தயாராகின. ஆனால், வானிலை அதற்குத் தயாராக இல்லை. தொடர்ந்து பெய்த மழையால், டாஸ் கூட போடப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

மழையால், இரண்டு அணிகளுடன் தோல்வியுடன் இந்தத் தொடரிலிருந்து விடைபெறாமல் தலா ஒரு புள்ளியுடன் விடைபெற்றிருக்கிறது. நாளை, குரூப் B-ல் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. இதில், வெற்றிபெறும் அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்பதால் நேற்றைய போட்டியைப் போல நிச்சயம் இந்தப் போட்டியிலும் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ENGvAFG: `அந்தப் பசங்களுக்கு பயமில்ல' - கடைசிவரை சண்டை செய்த ஆப்கானிஸ்தான் வெளியேறிய இங்கிலாந்துVikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
