ARTICLE AD BOX
இந்த வாரம் பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகும் நிலையில் வணங்கான், பாட்டல் ராதா, செல்ஃபி, டாக்கு மகாராஜ் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அந்த படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமை அன்று சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை 10க்கும் அதிகமான படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி வெளியாகும் படங்கள் ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாகின்றன. அந்த வகையில் இந்த வாரம் 21ஆம் தேதியான நாளை திரைக்கு வரும் படங்கள், நேரடியாக ஓடிடிக்கு வரும் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஏற்கனவே கார்த்தி, விஷ்ணு, பவித்ரா, மதுமிதா, அஸ்வின், சூசன் ஜார்ஜ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் பலரது நடிப்பில் 2013 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் தான் ஆபிஸ். 2 சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆபிஸ் சீரியலானது இப்போது புதுமுகங்களைக் கொண்டு வெப் சீரிஸாக உருவாக இருக்கிறது. கபீஸ் இயக்கத்தில் உருவான ஆபிஸ் என்ற வெப் சீரிஸானது முழுக்க முழுக்க காமெடியாக வெளியாக இருக்கிறது. இதில், குரு லட்சுமணன், சரித்திரன், ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, அரவிந்த், தமிழ்வாணி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் காமெடி கலாட்டா தான் இந்த வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ் நாளை ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
6 நாளில் 'வணங்கான்' வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய 'குடும்பஸ்தன்'!

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி ஆகியோர் பலரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் நாளை 21ஆம் தேதி டென்ட்கொட்டா மற்றும் அமேசன் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.

பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பாபி தியோல், சாந்தினி சவுத்ரி ஆகியோர் பலரது நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் தான் டாக்கு மகாராஜ். பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்த டாக்கு மகாராஜ் நாளை 21ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் தான் பாட்டல் ராதா. குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி இந்தப் படம் வெளியானது. இந்த நிலையில் ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வந்து இந்தப் படம் நாளை 21 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

விபி வினு இயக்கத்தில் அசோக் ரங்கராஜன், வீரா, பாண்டியம்மாள், வி.பி.ராஜசேகர் ஆகியோர் பலரது நடிப்பில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடக்கும் உண்மை கதையை மைப்படுத்தி வெளியான படம் தான் சாட்சி பெருமாள். இந்தப் படம் ஏற்கனவே 17ஆம் தேதி டென்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

டார்க் காமெடி கதையை மையப்படுத்திய தி ஒயிட் லோட்டஸ் படத்தின் 2 சீசன்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 3ஆவது சீசனும் உருவாக்கப்பட்டது. இந்தப் படம் 17ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

சிங்கத்தை மையப்படுத்தி வெளியான படம் தான் முஃபாசா: தி லயன் கிங். கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர், சிங்கம் புலி, விடிவி கணேஷ், அர்ஜூன் தாஸ் ஆகியோர் பலர் டப்பிங் கொடுத்திருந்தனர். உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.3,200 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி இந்தப் படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியது.

இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா நடிப்பில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் செல்ஃபி. கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் நாளை 21 ஆம் தேதி வெளியாகிறது.