ARTICLE AD BOX

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறும். 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பமேளாவில் 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் பொது மக்களுடன் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் என இந்தியாவின் மிக முக்கியமான பதவியில் உள்ள அனைவரும் திருவேணி சங்கத்தில் புனித நீராடி உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
வரும் மகா சிவராத்திரியோடு முடிவடையும் மகா கும்பமேளாவில் உத்தரப்பிரதேச அரசின் தகவலின் படி நேபாளத்தைச் சேர்ந்த 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புனித நீராடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி நட்டா அவரது குடும்பத்தினர் ரோடு கலந்துகொண்டு புனித நீராடினார். மேலும் கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்தும் வழிபட்டார். மத்திய அமைச்சருடன் மாநில முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் புனித நீராடலில் கலந்து கொண்டார்.