
மார்ச் 17, சென்னை (Cinema News): ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில்,ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லீ (Good Bad Ugly). தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கி வழங்கிய ஆதிக், தனது பாணியில் தல ரசிகராக நடிகர் அஜித் குமாரை இயக்கி படத்தை வழங்கி இருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 10 ஏப்ரல் 2025 அன்று படம் திரையரங்கில் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என உலகளவில் பல மொழிகளில் படம் வெளியாகிறது. Actress Bindu Ghosh Passed Away: நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
ஓஜி சம்பவம் ப்ரோமோ வீடியோ:
இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் ஓஜி சம்பவம் பாடல் ப்ரோமோ இன்று வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு, ஓஜி சம்பவம் பாடல் ப்ரோமோ (OG Sambavam Song Promo) வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கான இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளார். விஷ்ணு இடவன் வரிகளில் பாடல் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் கும்மர், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் குரலில் பாடல் உருவாகி இருக்கிறது. பின்னணி இக்குரலை சுகந்த சேகர், சிபி ஸ்ரீனிவாசன், அரவிந்த், கோவிந்த் பிரசாத், அபிஜிதா ராவ், வேலு ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். தல ரசிகராக தன்னை அடையளிப்படுத்திக்கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன், படத்தின் ஒவ்வொரு காட்சிகளில் இருந்து, பாடலையும் ரசிகனாக செதுக்கி இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக பாடலில் அவர் குரல் பதிவையும் செய்துள்ளார். நாளை (18 மார்ச் 2025) மாலை சுமார் 5 மணியளவில், ஓஜி சம்பவம் பாடல் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.