ARTICLE AD BOX

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77, ஜாகிர் அலி 45 ரன்கள் எடுத்தனர். அதைப்போல, நியூசிலாந்து அணி பந்துவீச்சை பொறுத்தவரையில்பிரேஸ்வெல் தான் கலக்கினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இவருடைய அசத்தலான பந்துவீச்சில் தான் 4 விக்கெட்கள் விழுந்தது. அவரை போல, வில்லியம் ஓரூர்க் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
பங்களாதேஷ் அணி 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்ததாக 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய வில் யங் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க சற்று அதிர்ச்சியான நியூசிலாந்து அணி இலக்கு குறைந்த இலக்கு பொறுமையாக விளையாடலாம் என திட்டமிட்டு மிகவும் நிதானமாக விளையாடி வந்தது.
அந்த சமயத்தில் டெவோன் கான்வே 30, கேன் வில்லியம்சன் 5 ரன்கள் எடுத்து விக்கெட்களை இழந்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த ரச்சின் ரவீந்திரா மிகவும் பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசினார். அவருடன் நல்ல பார்ட்னர் ஷிப் அமைத்துக்கொண்டு டாம் லாதம் சிறப்பாக விளையாடினார். தொடர்ச்சியாக விக்கெட் விடாமல் வெற்றி இலக்கை நோக்கி இருவரும் பேட்டிங் செய்த நிலையில் ரச்சின் ரவீந்திரா அதிரடி கலந்த நிதானத்துடன் சதம் விளாசினார்.
அதைப்போல, டாம் லாதம் அரை சதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா (117) ஆட்டம் இழந்தாலும் அணி வெற்றி பாதைக்கு திரும்பியது. இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக இறுதியாக ஓவர்கள் 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்கள் வீழ்த்தினார்கள்.