NS Ponkumar Marriage: ஏ.ஆர்.முருகதாஸின் துணை இயக்குனர் விவேகாவை காதலித்து கரம்பிடித்து பிரபல இயக்குனர்!

9 hours ago
ARTICLE AD BOX
<p>கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்தப் படம் ஆகஸ்ட் 16 1947. இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் என் எஸ் பொன்குமார். இவர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த கத்தி, ஸ்பைடர் மற்றும் அகிரா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இதே போன்று தான் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வந்த காஞ்சனா 3 தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன் மற்றும் முருகதாஸின் மாதரசி ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் ஆர் விவேகா.</p> <p>இருவரும் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்களது காதலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த மார்ச் 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பொன்குமாரின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கீழக்கலங்கலில் நடைபெற்றது.&nbsp;</p> <p>அங்குள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் வைத்து பொன்குமார் மற்றும் விவேகா திருமணம் நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆக்&zwnj;ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article