ARTICLE AD BOX
நீட் தேர்வுக்கான (NEET UG 2025) விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்த நீட் தேர்வை வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.
நீட் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், அட்மிட் கார்டு எனப்படும் ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை? என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின் படி, நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. அதேநேரம் மார்ச் 9 முதல் 11 ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான சிட்டி இண்டிமேசன் ஸ்லிப் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிடப்படும். அதாவது நீங்கள் எந்த நகரத்தில் தேர்வு எழுதப் போகிறீர்கள் என்ற தகவல் அதில் இடம்பெற்றிருக்கும். ஆனால் தேர்வு மையம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்காது. இந்த தகவல்கள் அட்மிட் கார்டில் தான் இடம்பெறும்.
இந்த அட்மிட் கார்டு தேர்வுக்கு 3 தினங்களுக்கு முன்னர் மே 1 ஆம் தேதி வெளியிடப்படும். இந்த அட்மிட் கார்டில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ ஒட்ட வேண்டும். கையெழுத்து மற்றும் கைரேகை வைக்க வேண்டும். எனவே தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் அட்மிட் கார்டு உடன் நீங்கள் நீட் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 கையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று அட்மிட் கார்டில் மற்றொன்று வருகை பதிவேட்டிலும் ஒட்ட வேண்டியிருக்கும்.
பின்னர் நீங்கள் அப்லோடு செய்த போஸ்ட் கார்டு சைஸ் போட்டோவையும் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். இதனையும் நீங்கள் அட்மிட் கார்டில் ஒட்ட வேண்டியிருக்கும்.