NEEK Review: தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. லப்பர் பந்து இயக்குநர் கொடுத்த விமர்சனம் இதோ!

6 days ago
ARTICLE AD BOX

NEEK Review: தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. லப்பர் பந்து இயக்குநர் கொடுத்த விமர்சனம் இதோ!

News
oi-Mari S
By
| Published: Thursday, February 20, 2025, 12:56 [IST]

சென்னை: தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தில் அவருடன் இணைந்து லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். மேலும், குட்டி நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன், கண்ணடித்தே ரசிகர்களை கவிழ்த்த பிரியா பிரகாஷ் வாரியர் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் அவரும் கேமியோ ரோலில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறார். நம்ம கோல்டன் ஸ்பேரோ பிரியங்கா மோகனும் கேமியோவாக ஆட்டம் போட உள்ளது ஆல்ரெடி அறிந்த ஒன்று தான்.

NEEK NEEK Review Tamizharaasan Pachamuthu

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நாளை தனுஷ் vs சிம்பு மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராகன் படத்திற்கு சிம்பு பாட்டுப்பாடி படம் பிளாக்பஸ்டர் அடிக்கும் என விமர்சனமும் கொடுத்துள்ள நிலையில், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க..

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க வேண்டிய படம்?: தனுஷ் திரைக்கதை எழுத இந்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க வேண்டியது என கோடம்பாக்கத்தில் கூறுகின்றனர். அவரே பேட்டி ஒன்றிலும் அதை கூறியிருந்தார். ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், ரொம்ப நாளாகவே கிடப்பில் இருந்த அந்த ஸ்க்ரிப்ட்டை தனது அக்கா மகனுக்காக நடிகர் தனுஷே எடுத்து இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு பெரிய என்ட்ரியுடன் பவிஷ் நாளை அறிமுகமாக காத்திருக்கிறார். அதுவும் மாமா தனுஷ் இயக்கம் என்றால் சொல்லவா வேண்டும் என ரசிகர்கள் அவரை வரவேற்க காத்திருக்கின்றனர்.

NEEK NEEK Review Tamizharaasan Pachamuthu

லப்பர் பந்து இயக்குநர் விமர்சனம்: டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், எஸ்.ஜே. சூர்யா, மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் என தனுஷ் உடன் பணியாற்றிய பலரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பார்த்துவிட்டு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த நிலையில், தனுஷ் உடன் விரைவில் பணியாற்ற லைனில் காத்திருக்கும் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது. ஏகப்பட்ட இளைஞர்களின் எனர்ஜி அப்படியே ரசிகர்கள் மீதும் பரவும் என எதிர்பார்க்கிறேன். தனுஷ் சார் சொன்னது போலத்தான் ஜாலியா வாங்க ஜாலியா போங்க, படம் அப்படியே திருச்சிற்றம்பலம் படத்தின் வைப் தான் என நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பந்தயம் அடிக்கும் என விமர்சித்துள்ளார். நடிகர் தனுஷ் அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

டிராகனை வீழ்த்துமா?: பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே ஒரு படம் நடித்த ஹீரோ. அவருடன் தனுஷின் அக்கா மகனான புதுமுக நடிகர் பவிஷ் இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் தனது மாமா தனுஷின் ஆதரவோடு மோத உள்ளார். இரண்டு படங்களுமே நல்லா இருந்தால் ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பார்கள். இல்லையென்றால் ஓடிடியில் வரும் வரை காத்திருப்பார்கள் என்பது தனிக்கதை. லவ் டுடே வெற்றி பிரதீப் ரங்கநாதனுக்கு வசூல் ரீதியான வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் தயாரிப்பு என்பதால் டிராகனை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வீழ்த்தவும் வாய்ப்புகள் அதிகம். பிரேமலு மாதிரி படம் இருந்தால் இளைஞர்களை கண்டிப்பாக கவர்ந்துவிடும்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Nilavuku En Mel Ennadi Kobam Review done by Lubber Pandu Director Tamizharaasan Pachamuthu: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கு லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.
Read Entire Article