ARTICLE AD BOX
NEEK Prediction: சொல்லி அடித்த தனுஷ்? நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் முதல் நாள் வசூல் கணிப்பு!
சென்னை: ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்த தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் மற்றும் காமெடி கலந்த திரைப்டபம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் தனுஷ் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கும் நிலையில் படத்தில் பாடல்கள் இணையத்தில் ஹிட்டடித்து விட்டன. மேலும், மேத்யு தாம்ஸ் , அனிகா சுரேந்தர், பிரியா பிரகாஷ் வாரியர் , ரம்யா ரங்கநாதன் , ஆடுகளம் நரேன் , சரண்யா பொன்வண்ணன் , சரத்குமார் ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள்.
இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிக்கெட் விற்பனை சிறப்பாக உள்ளது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஏகப்பட்ட திரையரங்குகளில் தொடங்கி திங்கட்கிழமையே தொடங்கிவிட்டது. மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை ஹவுஸ்ஃபுலாக உள்ளது.இத்திரைப்படம் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்கிற கணிப்புகள் வெளியாகி உள்ளது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: படத்தின் கதை: ராயன் படத்தில் ஒரே வெட்டு, குத்து, ரத்தம் என வன்முறை அதிகமாக இருந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டிய நிலையில்,நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இன்றைய இளசுகள் வசிக்கும் வகையில் ஜாலியான கதையாக எடுத்து சென்று இருக்கிறார் தனுஷ். படத்தின் நாயகனான பவிஷ், கல்லூரியில் படிக்கும் போது அனிகாவை காதலிக்கிறார். ஆனால், இந்த காதல் கைகூடாமல் போய்விடுகிறது. காதல் தோல்வியில் துவண்டு போன பவிஷ், பிளே பாயாக மாறி பல பெண்களுடன் சுற்றித்திரிகிறார்.
ஜாலியான கதை: இவனை இப்படியே விட்டால், வாழ்க்கை வீணாகிவிடும் என நினைக்கும் பெற்றோர், ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். பெற்றோர் சொன்னால் பவிஷ், பெண் பார்க்க போக,ன அங்கே பள்ளித் தோழியான பிரியா பிரகாஷ் வாரியர் இருக்கிறார். இருவரும் மனம்விட்டு பேசி விட்டு, கொஞ்சநாள் பழகிவிட்டு, பின் திருமணம் குறித்து முடிவு எடுக்கலாம் எனஇருவரும் முடிவு செய்கின்றனர். இந்த நேரத்தில் தான், அனிகா திருமண பத்திரிக்கை வருகிறது. அதன் பின் என்ன ஆனது. பவிஷூக்கும் பிரியா வாரியாருக்கும் திருமணம் நடந்ததா.. இல்லையா என்பது தான் படத்தின் கதை. தனுஷ் டிரைலரில் சொன்னது போலவே படத்தை ஜாலியாக கொண்டு சென்று இருக்கிறார்.

முதல் நாள் வசூல்: இன்று வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் நாட்கள் சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மேலும், பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படமும் இன்று வெளியாக இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜே சித்து, ஹர்ஷத் கான். அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் இது என்பதால், இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. டிராகன் படத்தால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்பதை பொருத்து இருந்து தான்பார்க்க வேண்டும்.
