ARTICLE AD BOX
தனுஷ் இயக்கத்தில், 3-ஆவது படமாக வெளியாகி உள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் முதல் நாளை விட இரண்டாவது நாளில் குறைவான வசூலையே பெற்றுள்ளது.

வெள்ளித்திரையில், பன்முக திறமையாளராக வலம் வரும் தனுஷ், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாரிசியார் என தடம் பதித்துள்ள நிலையில், ஒரு இயக்குனராகவும் தன்னுடைய முதல் படத்தியிலேயே வெற்றி கண்டவர். அந்த வகையில், தன்னுடைய அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ்கிரணை கதையின் நாயகனாக வைத்து இவர் இயக்கிய திரைப்படம் தான் பா.பாண்டி. ராஜ்கிரணின் இளமை பருவ கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ராஜ்கிரண் காதலிக்கும் பெண்ணாக ரேவதி நடிக்க, அவரின் இளமை பருவ வேடத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். சூழ்நிலை காரணமாக காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் பிரிய நேர்கிறது. எனவே தன்னுடைய வயதான காலத்தில் அவரை தேடி செல்கிறார். அப்போது என்ன ஆகிறது? என்பதே இந்த படத்தை மிகவும் அற்புதமாக இயக்கி இருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது இந்த படம்.
NEEK Movie | இந்த படம் lovers க்கு மட்டும் இல்லை? வெட்கத்தில் சிரித்த நடிகை அனிகா!

இந்த படத்திற்கு பின்னர், 6 வருடங்கள் திரைப்படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த தனுஷ் கடந்த ஆண்டு தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கி இருந்தார். வடசென்னை பகுதியின் நடக்கும் கதைக்களத்தில் உருவான இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக யாரும் இல்லை என்றாலும், இதுவரை ஏற்று நடித்திடாத வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கப்பட்டார். மேலும் இந்த படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து இந்த படத்தை ஹிட் படமாக மாற்றியது.

இதை தொடர்ந்து தற்போது தனுஷ், தன்னுடைய மூன்றாவது படமாக இளவட்ட நடிகர்களை வைத்து இயக்கிய திரைப்படம் தான், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்'. எதார்த்தமான ஒரு காதல் கதையில், பெரிதாக எந்த ஒரு ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படம், பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படம் முதல் நாளில் ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

தற்போது இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. திரைப்படங்களில் வசூல் நிலவரத்தை கணித்து கூறும், Sacnilk நிறுவனத்தின் தகவல் படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் இரண்டாவது நாளில் முதல் நாளை விட குறைவான வசூலையே பெற்றுள்ளதாம். அதன்படி இந்த படம் 2-ஆவது நாளில் ரூ.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வசூல் மோசமாகி வருவதால், இப்படம் தனுஷ் இயக்கத்தில் வெளியான முதல் பிளாப் படமாக அமைந்து விடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிரிபார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்க, அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், நரேன், சரண்யா பொன்வண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.