ARTICLE AD BOX
Nayanthara: இனிமேல் லேடி பிளாப் ஸ்டார்.. நயன்தாராவை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் அஜித், தன்னை தல என்றும், கடவுளே அஜித் என அழைக்க வேண்டாம், அஜித் குமார் என அழைத்தால் போதும் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அதே போலத்தான் நடிகை நயன்தாரா தனது சோசியல் மீடியாவில், என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது என பதிவிட்டு, இனி மேல் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறியிருந்தார். இந்த அறிக்கை இணையத்தில் டிரெண்டான நிலையில் இணையவாசிகள் நயன்தாராவை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார். ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தொழிலதிபராக பிரகாசித்து வரும் நயன்தாரா,

டெஸ்ட், டாக்சிக், ராக்காயி, மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், கவினுடன் ஒரு படம் என நயன்தாரா அரை டஜன் படங்களை வைத்து இருக்கிறார்.
இனிமேல் நயன்தாரா தான்: இந்நிலையில் நடிகை நயன்தாரா திடீரென அறிக்கை வெளியிட்டார். அதில், என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது, உங்கள் நிச்சயமற்ற அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தியது நீங்கள்தான். பலரும் என்னை "லேடி சூப்பர்ஸ்டார்" என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை "நயன்தாரா" என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்கிட்டயே ஜோக்காட்டுறியா: ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது- ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும் என பதிவிட்டு இருந்தார். இது இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து இணையவாசிகள் மீம்ஸ் போட்டு நயன்தாராவை பங்கம் செய்துள்ளார். அதாவது, ஈ படத்தில் ஜீவா,நயன்தாராவை அடிக்கும் காட்சியைப்போட்டு...என்கிட்டயே ஜோக்காட்டுறியா என்ற டையலாக்கை வைத்துள்ளார்.

லேடி பிளாப் ஸ்டார் : அதே போல மற்றொரு மீம்ஸ் கிரியேட்டர், 11 படம் பிளாப்... 12வது படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இனி நீ லேடி சூப்பர் ஸ்டார் இல்ல.. லேடி பிளாப் ஸ்டார் என பங்கமாக கிண்டலடித்துள்ளார். அதே போல, சூரி... டீ கடைக்கார அண்ணா.. என்னை யாராவது கேட்டா, நான் சூப்பர்ஸ்டார் இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்பது போல மீம்ஸ் போட்டுள்ளனர். இந்த மீம்சை எல்லாம் நயன்தாரா பார்த்தால், பேசமான இந்த அறிக்கை விடாமலே இருந்து இருக்கலாம் என்று தான் நினைத்து இருப்பார்.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது யார்: திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போன நயன்தாரா, 2015-ம் ஆண்டு தனி ஒருவன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் ஹிட்டடித்தது, அதைத்தொடர்ந்து வெளியான, மாயா, நானும் ரவுடிதான் படங்களிலும் வெற்றிபெற்றதால், அப்போதே பலரும் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். அதன் பின் ஒரு நிகழ்ச்சியில், லேடி சூப்பர் ஸ்டார் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதன் 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் தான் முதல்முறையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை நயன்தாரா பயன்படுத்தினார்.
