ARTICLE AD BOX
Muthukumaran: அப்பாவுக்கு கோல்ட் மெடல் கேட்கும் பிக்பாஸ் முத்துக்குமரன்.. போட்டி தான் ஹைலைட்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கமாகவே செம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அவர் தனது வீட்டில் தனது தயார் சமைத்துக் கொடுக்கும் உணவை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது அவரது வாடிக்கையான விஷயங்களில் ஒன்றாக உள்ளது. அப்படி இருக்கும்போது முத்துக்குமரன் , தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தனது தந்தைக்கு ஒலிம்பிக்கில் கோல்ட் மெடல் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே முத்துக்குமரனுக்கு, மக்கள் மத்தியில் ஊடகவியலாளராக நல்ல அறிமுகம் கிடைத்திருந்தது. அப்படி இருக்கும்போது, பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பையும் புகழையும் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வென்ற முத்துக்குமரன், தனது சிறப்பான ஆட்டத்தால் டைட்டில் வின்னராகவும் ஆனார்.

அவருக்கு கிட்டத்தட்ட ரூபாய் 41 லட்சம் ரூபாய் பணமும், ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கு பரிசாக கிடைத்தது. முத்துக்குமரனின் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், மக்கள் பலரும் அவரது ரசிகராக மாறிப்போனார்கள். இப்படி இருக்கும்போது சக போட்டியாளர்களில் பலருடன் ஏற்பட்ட வாதங்களில் முத்துக்குமரனின் நிலைப்பாடும் முடிவுகளும், பலருக்கும் சரி எனத் தோன்றியாதால், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. அதே நேரத்தில், சக போட்டியாளர்களே இவர்தான் வெற்றியாளர் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

முத்துகுமரன்: இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது வீட்டில் அமர்ந்து சாப்பிடுகிறார். நாட்டுக் கோழிக் குழம்புடன் சாப்பிடும் முத்துக்குமரன் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதாவது வாரம் ஒரு முறை நாட்டுக் கோழி கறிக் குழம்பு சாப்பிட வேண்டும். சிங்கப்பூர், துபாய் என எங்கெங்கோ செல்கிறோம், ஆனால் நம் மனது முழுவதும் அம்மா வைக்கும் கோழிக்கறி குழம்பில்தான் உள்ளது.
கோல்ட் மெடல்: எல்லோரும் நாட்டுக்கோழி சாப்பிடுங்கள். இந்த அருமையான குழம்புக்காக, இரண்டு பேரை பாராட்ட வேண்டும். முதலில் அருமையாக குழம்பு வைத்த என் அம்மா. மற்றொன்று நல்ல கோழியை தேர்வு செய்த எனது அப்பா. குழம்பு வைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு, கோழியை தேர்வு செய்வதும் முக்கியம். குழம்புக்கு கோழியை தேர்வு செய்வதை ஒலிம்பிக்கில் சேர்த்தால், அதில் என் அப்பாவுக்கு கோல்ட் மெடல் கிடைக்கும் என நினைக்குறேன்" என நகைச்சுவையாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.