
பிப்ரவரி 25, சென்னை (Kitchen Tips): முள்ளங்கியின் நன்மைகள் அனைவரும் அறிந்ததே…. இதை வைத்து என்ன செய்யலாம்? சாம்பார், காரக் குழம்பு, சட்னி, துவையல் என்று செய்யலாம். இப்போது பொரியல் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – கால் கிலோ
பயத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி
மிளகாய் 4
சீரகம் – 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் Banana Kesari Recipe: சுவையான வாழைப்பழ கேசரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்து, வாணலி சூடானதும் பயத்தம்பருப்பை போட்டு சற்று நிறம் மாறும் வரை வறுக்கவும். சிவப்பு மிளகாய், சீரகம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இதை ஆறியதும் அரைக்க வேண்டும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு, சிறிது சிறிதாக நறுக்கிய முள்ளங்கியைப் போடவும். தேவையான உப்பை சேர்த்து, ஒரு தட்டைப் போட்டு வாணலியை மூடி விடவும். அவ்வப்போது முள்ளங்கியை கிளறி விடவும். முள்ளங்கி நன்றாக வதங்கியதும், வறுத்து அரைத்த பொடியைக் கலந்து விடவும். இப்போது அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான். முள்ளங்கி பொரியல் தயார்.