ARTICLE AD BOX
Morning Quotes : நாம் ஏன் காலையில் நல்ல பழக்கங்களை மட்டுமே செய்யவேண்டும் என்று நீங்கள் ஆச்சர்யப்பட்டு இருக்கிறீர்களா? அது நாம் ஒரு நாளை எவ்வாறு துவங்குகிறோம் என்பதில்தான், அன்றைய நமது நாள் எப்படி இருக்கப்போகிறது என்பது உள்ளது. உலகின்ற தலைசிறந்த நபர்களிடம் இருந்து சில காலை குறிப்புகள்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அதிகாலை 3.45 மணிக்கு எழுந்திருப்பார். அப்போது முதலே அவரின் நாளை துவக்கிவிடுவார். அவர் காலை வேளையை தனது ஈமெயில்களுக்கு பதில் அளிப்பதில் செலவிடுவார். பயனாளர்களின் ஃபீட் பேக்குகளுக்கு பதில் கொடுப்பது மற்றும் அன்றைய நாளை திட்டமிடுவதில் செலவிடுவார்.
மேலும் வாசிக்க | அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவரா? எழுந்தவுடன் என்ன செய்யலாம்.
வின்ஃப்ரே ஓப்ரா
அமெரிக்க சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே காலையில் எழுந்து தியானம் செய்வார். மனநிறைவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர்கள் 20 நிமிடங்கள் தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கு மனத்தெளிவு மற்றும் உணர்வு சமநிலை ஏற்பட இது காரணமாகிறது.
தி ராக்
நடிகர் மற்றும் முன்னாள் மல்யுத்த வீரர் தி ராக் என்ற டிவேனா ஜான்சன், அதிகாலையில் எழுந்து கடும் உடற்பயிற்சி செய்வார். அவர் எடைப்பயிற்சி, கார்டியோ மற்றும் சில ஸ்ட்ரெசிங்குகள் செய்வதை தனது வழக்கமாகக்கொண்டுள்ளார். அது அவருக்கு ஆற்றலையும், அதிக திறன்களையும் வளர்க்க உதவும்.
வாரன் பஃபட்
முதலீட்டாளர் மற்றும் பில்லனியர் வாரன் பஃபட் காலையில் செய்தித்தாள்கள் வாசிப்பதிலும், புத்தகங்கள் படிப்படிதிலும், பொருளாதார அறிக்கைகளை பார்வையிடுவதிலும் நேரத்தை செலவிடுகிறார். அவர், நீண்ட கால வெற்றிக்கு தொடர்ந்து கற்பதுதான் முக்கியம் என்று கருதுகிறார்.
எலன் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் சிஇஓ எலன் மஸ்க் அவரது அட்டவணையை முறையாகக் கடைபிடிப்பவர். இவர் தனது நாளை காலையில்தான் திட்டமிடுகிறார். அதற்கு சில நிமிடங்களே எடுத்துக்கொண்டாலும், அந்த நாளை அதிக திறனுள்ளதாக மாற்ற என்ன செய்யமுடியும் என முயல்கிறார்.
மிச்சல் ஒபாமா
மிச்சல் ஒபாமா முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணியாவார். இவர் தனது காலையை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவுடன் துவங்கிறார். அதில் அதிக புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்கும். இது நாள் முழுவதிலும் கவனம் செலுத்தவும், ஆற்றல் அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் தனது காலையில் ஒரு மணி நேரம் டிரட் மில்லில் செலவிடுவதில் துவங்குகிறார். தனது ஜிம்மில் உடற்பயிற்சியை கல்வி வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இவர் துவங்குகிறார். அதனால் அவரது மூளை சுறுசுறுப்புபடைகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
இந்திரா நூயி
முன்னாள் பெப்சிகோவில் சிஇஓ இந்திரா நூயி அதிகாலையில் 4 மணிக்கு எழுபவர். அவர்கள் காலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு, தனது பணியில் மூழ்கிவிடுகிறார். இவர் காலையில் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதில்லை.
ஜெஃப் பிசோ
அமேசானின் நிறுவுனர் ஜெஃப் பிசோ காலையில் அமைதியாகவும், அதே நேரத்தில் திறன்மிக்க காலை பழக்கங்களை கொள்கிறார். இவர் அலாரம் இல்லாமல் எழுந்து, கடும் சவாலான வேலைகளுக்கு 10 மணி முதல் 12 மணி வரை முன்னுரிமை கொடுக்கிறார்.
சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது காலையை அமைதியாகவும், மெதுவாகவும் துவங்குகிறார். இவர்கள் கற்றபது மற்றம் தயார் செய்வது ஆகியவற்றில் நேரம் செலவிடுகிறார். இவர் தனது நாளை செய்திகள் வாசிப்பதில் துவங்குகிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்