சேலத்தில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "பிப்ரவரி முதல் வாரம் படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக கூறினார். மறைக்கப்பட்ட வரலாற்றை, எனது திரைப்படத்தை கதைக்களத்தில் எழுதியுள்ளதாக கூறினார். அறிவிப்பு வெளியான உடனே அது குறித்த விவாதங்கள் ஆரம்பித்துவிடும் என்றார்.

படத்தின் அறிவிப்பு வெளியிட இருந்த நிலையில் பஞ்சாமிர்தம் குறித்து பேசியதால், என்மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்கு முன்பாக பேசியிருந்த தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை; இதனால்தான் தாமதம் ஏற்பட்டது. தற்பொழுது மற்றொரு தயாரிப்பாளர் உடன் பேசி படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

100 ரூபாய் கொடுத்து திரையரங்கில் திரைப்படத்தை பொதுமக்கள் பார்க்கும்போது இதில் 28 ரூபாய் வரியாக சென்றுவிடும், இரண்டு ரூபாய் செலவினங்கள் சென்றுவிடும். மீதமுள்ள தொகையில் 60 சதவீதம், திரையரங்கிற்கும் 40 சதவீதம் திரைப்படத்தினருக்கும் கிடைக்கும். ஒரு திரைப்படம் ஒரு கோடி சம்பாதித்தால் 40 லட்சம் தான் தயாரிப்பாளருக்கு வந்துசேரும்.எனவே வரி சுமையை குறைத்தால் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் லாபமாக அமையும். கண்டிப்பாக தமிழக அரசும், மத்திய அரசு குறைத்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி நிலைபாட்டை மாற்றிக்கொண்டே உள்ளார். தற்பொழுது இந்த நிலைப்பாட்டில் உள்ளார். தொடர்ந்து இந்த நிலைப்பாட்டிலையே இருப்பாரா? என்று தெரியவில்லை. இதற்கு முன்பாக பெரியார் பற்றி பெரியதாக இருந்தது, அது தற்பொழுது மாறி புதிய புதிய விஷயங்கள் தெரியவருகிறது. குறிப்பாக ஆதாரத்துடன் பேசுவதாக கூறும் நிலையில் சீமான் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இரண்டு தரப்பு நியாயங்களை சொல்லும் பொழுது தான். எது உண்மை என்று தெரியவரும் என்றார்.

ஒரு மனிதன் என்றால் நல்லது, கெட்டது என்று இரண்டுமே இருக்கும். இது பெரியாருக்கும் முரண்பாடான விஷயம் அல்ல, அவருக்கு இருக்கும். நல்லது என்றால் பெரியாரின் சமூகநீதி என்பதை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். மற்றதை எல்லாம் கேள்வி போடும்போது அதிர்ச்சியாக உள்ளது என கூறினார்.

மேலும் நான் கைதானபோது எனது செல்போன் காவல்துறையிடம் 40 நாட்கள் இருந்தது. பின்னர் வெளியே வந்தவுடன் செல்போனை வாங்கியபோது செல்போனில் இருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார். இதுதொடர்பாக இதுவரை விசாரித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது செல்போனில் தான் படத்தின் கதை, அடுத்த படம் குறித்த அனைத்து தகவல்களும் இருந்தது எனவும் தெரிவித்தார்.

என்னுடைய படங்களில் இல்லாத விஷயங்களை சொன்னால்தான் சர்ச்சை. சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளை கூறினால் அது சர்ச்சை இல்லை. சமூகத்தில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக கூறியதால் சர்ச்சை என்ற வார்த்தை பயன்படுத்துகிறார்கள். எனது படங்கள் எளிய மக்களுக்கான படமாக உள்ளது. எனவே என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் கேள்விப் படாத பெரிய விஷயத்தை பேசப் போகிறேன் என்றார்.

தமிழகத்தில் சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என எதுவாக இருந்தாலும், சினிமாவை எடுப்பது எளிது. ஆனால் படத்தை திரையிட்டு, போட்ட பணத்தை எடுப்பது மிக சிக்கலாக உள்ளது. இதற்கு முன்பாக 10 தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். தற்போது படத்தை எடுத்தவர்களே, படத்தை வெளியிடும் சூழல் உருவாகியுள்ளது. இதற்குக் காரணம் சினிமாவில் உள்ளவர்களும், அரசியலும் தான் இதை சரி செய்ய முடியாது. படத்தை எடுப்பது எளிது, அதை வெளியிடுவது தான் மிகவும் சிரமமான ஒன்று எனவும் தெரிவித்தார்.

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதிற்கு தகுதியான மனிதர். கலை தொடர்பாக நல்ல கருத்துக்களை தான், மக்களிடம் கூறியுள்ளார். நேர்கொண்ட பார்வையில் பெண்களுக்காக அவர் பேசியது பெரிய விஷயம். தனி ஒரு மனிதனாக இருந்து பின்புலம் இல்லாமல் மெக்கானிக்கல் ஷாப்பில் இருந்து உலக அளவில் மோட்டார் துறையை மூன்றாவது இடத்தில் கொண்டு போய் வைத்துள்ளார். அதுகூட அவருக்கு பத்மபூஷன் விருது கொடுப்பதற்கான காரணமாக இருக்கும் என்றும் கூறினார்.

இயக்குனர் வெற்றிமாறனின் தீவிர ரசிகன் நான். நான் அதிகப்படியாக சூட்டிங் எடுத்து நாட்கள் 33 நாட்கள் மட்டுமே. ஆனால் டைரக்டர் வெற்றிமாறன் 240 நாட்கள் வரை சூட்டிங் எடுக்கிறார். அது அவருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம், அனைத்து இயக்குனர்களுக்கும் அது கிடைத்துவிடாது. வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் சிறைபட்டு கிடப்பது போன்றும், படிக்க அனுப்புவதில்லை, சுதந்திரமாக இல்லை என சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. பிராமணர் சமூகத்தை சேர்ந்த மக்களை காண்பித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் குறித்து ட்ரெய்லரில் வரும் காட்சிகள், வசனங்கள் கடுமையாக கண்டிக்ககூடியது. அதனால்தான் அது குறித்து காட்டமான பதில் அளித்து இருந்தேன்.

ஆண்களை தான் போதைக்கு அடிமையாக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். காலேஜ் செல்லும் பெண்களை தான், குறி வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது பள்ளிக்கு செல்ல பெண்களை குறி வைத்தும் படம் எடுக்கிறார்கள். திருமணத்தைத் கடந்த உறவு உள்ளிட்டவைகளை எல்லாம் சினிமாவில் திணித்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. அவருடைய ஒரு ரசிகராகவும், ஒரு இயக்குனராக நானும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக வெற்றிமாறன் காதிற்கு சென்று இருக்கும்; அதை சரிசெய்து கொண்டு தான் படத்தை வெளியிடுவார் என்று நினைக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறன் அவரது உதவி இயக்குனர்கள் படத்தை எடுத்தாலும், கதை விவாதத்தில், படத்தில் உருவாக்கத்திலும் இருப்பார். இதைப் பெண் இயக்குனர் தான் எடுத்தார் என்று கூறி தப்பிவிட முடியாது எனவும் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் இப்பொழுது தான் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பாக அரசல்புறசலாகவே நிறைய விஷயங்களை கேள்விபட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆதாரமில்லாமல் செவி வழி, விஷயமாக கூறியதால் தான் வழக்கு வரை சென்றுவிட்டது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ஆதாரமான சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று உள்ளது. எனவே எல்லாம் கல்லூரிகள், மாணவிகள் விடுதிகளின் வளாகம் உள்ளிட்டவைகளில் சிசிடிவி கேமரா பொருத்தி, அந்த வளாகம் எந்த காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதோ? அந்த காவல்துறையினர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பத்தில் இது சுலபமான காரியம்.. இவ்வாறு செய்தால் இதுபோன்ற குற்றங்கள் குறையும். பெண்கள் வெகுளியாக உள்ளனர், அவர்களை மிரட்டி பாலியல் தொடர்பான தொந்தரவுகளில் ஈடுபடுகிறார்கள். அதை வெளியே சொல்லவும் பெண்கள் பயப்படுகிறார்கள்.சிசிடிவி கேமரா மட்டுமே,ஒரே தீர்வாக இருக்கும் என்பது எனது கருத்து என்றார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்றுமக்கள் காத்திருக்கிறார்கள்;அதே போன்று தான் நானும் காத்திருக்கிறேன் எனக் கூறினார்.

ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையே இருப்பது மோதல் அல்ல. செயற்குழு கூட்டம் என்றால் சுதந்திரமாக பேசுவதற்கு வழி இருக்கிறது. மேலும் அன்புமணி ராமதாஸ் மருத்துவர் பட்டம் பெற்றுவிட்டு, பல்வேறு மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். பல்வேறு சாதனைகள் செய்வதற்கு தகுதி உள்ள மனிதர். அவரை குடும்ப அரசியலுக்குள் கொண்டு வருவது சரியானதாக இருக்காது என்றார்.

பெரியாரைப் பற்றி நிறைய நல்லது உள்ளது, கெட்டதும் உள்ளது நீங்கள் இதில் எதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று தான் முக்கியம். பெண் அடிமைத்தனம், சமூகநீதி உள்ளிட்டவைகளில் அவருக்கு பங்கு உள்ளது. பெரியார் வந்து தான் அனைவரும் படித்தார்கள். தமிழ்நாட்டை அவர் வந்து தான் முன்னேற்றினார்கள் என்பது எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. அதில் நான் எதிர் நிலைப்பாடு தான். மேலும் சீமான் ஒன்று கூறுகிறார்; திராவிட கழகத்தில் ஒன்று கூறுகிறது என்றால்,இரண்டில் எது நல்லது என்பதை பார்த்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்" எனவும் கூறினார்.