Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...

1 day ago
ARTICLE AD BOX

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு, 19-வது தவணையை நேற்று விடுவித்த பிரதமர் மோடி, அதன் பின், கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கிசான் திட்டம் என்பது என்ன.?

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளித்த, அவர்களை உயர்த்தும் நோக்கில், கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்தான் பிரதமர் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ், நிலம் வைத்து விவசாயம் செய்யும் ஒரு விவசாயிக்கு, ஆண்டுதோறும் 6000 ரூபாய், 3 தவணைகளில் வழங்கப்படும். இந்த பணம், மத்திய அரசின் மூலம், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதல் தவணையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

19-வது தவணையாக ரூ.22,000 கோடியை விடுவித்த பிரதமர் மோடி

இந்த நிலையில், இந்த மாதம், கிசான் திட்டத்தின் 19-வது தவணையை நேற்று விடுவித்தார் பிரதமர் மோடி. அதன்படி, 2 கோடியே 41 லட்சம் பெண் விவசாயிகள் உட்பட, மொத்தம் 9 கோடியே 80 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.22,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி. இதில்,

ரூ.3.5 லட்சம் கோடி வரவு - பெருமிதம் தெரிவித்த மோடி

இந்த நிலையில், 19-வது தவணையை விடுவித்தபின், தனது எக்ஸ் பக்கத்தில் இத்திட்டம் குறித்து பெருமிதம் தெரிவித்து பிரதமர் மோடி பதிவிட்டார். அதில், விவசாய சகோதர, சகோதரிகளுக்கு கிசான் திட்டத்தின் 19-வது தவணையை வாங்கும் பாக்கியம் கிடைத்ததாக கூறியுள்ளார். நாடு முழுவதும் சிறு விவசாயிகளுக்கு இத்திட்டம் பயனளிப்பது தனக்கு மிகவும் திருப்தியளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுவரை விவசாயிகளின் கணக்குகளில் மொத்தம் ரூ.3.5 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தாம் பெருமையடைவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Read Entire Article