Mitchell Santner : ``நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" - தோல்வி பற்றி சாண்ட்னர்

6 hours ago
ARTICLE AD BOX

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

IND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந்த வீரர்கள்' - சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா
நியூசிலாந்து

தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் பேசியதாவது, ``எங்களுக்கு இது ஒரு சிறந்த தொடர். ஒரு அணியாக நாங்கள் கிரிக்கெட் ஆடிய விதத்தில் மகிழ்ச்சி. நாங்கள் ஒரு சிறந்த அணியால்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். பவர்ப்ளேக்கு பிறகு நாங்கள் இரண்டு மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்துவிட்டோம். அவர்கள் வைத்திருப்பது உலகத்தரமான ஸ்பின்னர்கள். அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 25 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். பிலிப்ஸ் எப்போதுமே அவ்வளவு சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர்தான்.

ரச்சின் பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இளம் வயதிலேயே ஆட்டத்தின் போக்கை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதை
நியூசிலாந்து

ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் எங்களுக்காக சிறப்பாக ஆடினார். நாங்கள் நெருங்கி வந்துதான் தோற்றிருக்கிறோம். இந்த அணிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். எங்களுக்கு இது ஒரு நல்ல தொடர்தான்.' என்றார்.

Read Entire Article