ARTICLE AD BOX
Meenakshi Chaudhary Net Worth: 28 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?.. மீனாட்சி சவுத்ரி ஆட்சி தான்!
சென்னை: தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்தார். ஆனால், அந்த 2 படங்கள் எல்லாம் படுதோல்வி பட்ங்களாக மாறிய நிலையில், விஜய்யுடன் இணைந்து மீனாட்சி நடித்த கோட் திரைப்படம் தான் கோலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் படமாக மாறியது.
ஆனால், அந்த படத்தில் நடித்ததற்கும் வருத்தம் தெரிவித்து இருந்தார் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கில் தற்போது இஷ்டத்துக்கு இவருக்குத்தான் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் செம ஹேப்பியாக உள்ளார். லக்கி பாஸ்கர் மற்றும் சங்கராந்திகி வஸ்துனம் படங்கள் அடுத்தடுத்து வசூல் வேட்டை நடத்த சம்பளத்தையும் கடகடவென உயர்த்திவிட்டாராம்.

சாய் அபயங்கரின் சித்திரபுத்திரி பாடலில் செம கவர்ச்சியாக ஆடி இளைஞர்களை கவர்ந்துள்ள மீனாட்சி சவுத்ரி இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஹரியானா பொண்ணு: ஹரியானாவின் பாஞ்ச்குலாவில் பிறந்து வளர்ந்தவர் தான் மீனாட்சி சவுத்ரி. 1997ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பிறந்த இவர் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பல் மருத்துவரான இவர் மாடலிங்கில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஃபெமினா மிஸ் இந்தியா உள்ளிட்ட அழகிப் போட்டிகளில் பங்கேற்று ரன்னர் அப் ஆக தேர்வானவர். அப் ஸ்டார்ட்ஸ் எனும் இந்தி படத்தின் மூலம் கடந்த 2019ல் பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் மீனாட்சி சவுத்ரி.
எகிறிய சம்பளம்: ஆரம்பத்தில் 50 முதல் 70 லட்சம் சம்பளம் வாங்கி வந்த மீனாட்சி சவுத்ரி கடந்த தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் படம் ஹிட்டான நிலையில், அதிரடியாக தனது சம்பளத்தை 3 கோடி வரை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இந்த பொங்கலுக்கு வெங்கடேஷ் நடிப்பில் வெளியான சங்கராந்திகி வஸ்துனம் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், அதிரடியாக 5 கோடி வரை சம்பளத்தை மீனாட்சி சவுத்ரி உயர்த்திவிட்டதாக கூறுகின்றனர்.

சொத்து மதிப்பு: 5 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரிக்கு ஐதராபாத்தில் 7 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு உள்ளதாக கூறுகின்றனர். விளம்பரங்களில் நடிக்க 50 லட்சம் முதல் 2 கோடி வரை வாங்கி வருகிறாராம். இதுவரை ஒட்டுமொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு 15 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக சொத்து மதிப்பை அதிகரித்துவிடுவார் என்கின்றனர்.