ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் டிரெண்ட்டில் இருப்பார்கள். அப்படி தற்போதைய டிரெண்டில் இருக்கிறார் மமிதா பைஜு. தருண் மூர்த்தியின் ̀அப்ரேஷன் ஜாவா', ரஜிஷா விஜயனின் ̀கோ -கோ' போன்ற திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து மலையாள சினிமாவில் லைம் லைட்டை மெல்ல தன் பக்கம் திருப்பினார். அதன் பிறகு இவர் நடித்த ̀சூப்பர் ஷரண்யா', ̀ப்ரனய விலாசம்' போன்ற திரைப்படங்கள் இவரை பலரின் ஃபேவரைட்டாக்கியது.

இப்படங்களை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான ̀ப்ரேமலு' திரைப்படம் இவரை கோலிவுட், டோலிவுட் என அனைத்துப் பக்கங்களுக்கும் புதிய க்ரஷாக கொண்டுச் சென்றது! அப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் மமிதா பைஜூ. அவருடைய லைன் அப்பை இதில் பார்ப்போமா...
SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளியான புகைப்படங்கள்!கடந்தாண்டு வெளியான ̀ரெபல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜி.வி. பிரகாஷுடன் அப்படத்தில் நடித்திருந்த மமிதா பைஜூவுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்தது. தற்போது விஜய்யுடன் ̀ஜனநாயகன்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்து வருகிறார். இப்படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது எனக்கு கனவு நனவாகியது போன்றதொரு தருணம் எனவும் மமிதா கூறியிருந்தார். இப்படத்திற்கு முன்பே விஷ்ணு விஷாலின் ̀இரண்டு வானம்' படத்தில் நடிப்பதற்குக் கமிட்டாகிவிட்டார் மமிதா. ̀முண்டாசுப்பட்டி', ̀ராட்சசன்' ஆகியப் படங்களை தொடர்ந்து மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார். கொடைக்கானல் பகுதியில் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது எனவும் முன்பு கூறப்பட்டது.

இதையெல்லாம் தாண்டி பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் மற்றுமொரு படத்திலும் ஹீரோயினாக மமிதா நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால், ̀டிராகன்' படத்தின் ரிலீஸுக்கு பிந்தைய நேர்காணல் ஒன்றில் இந்த தகவலை சூசகமாக உறுதிப்படுத்தும் வகையில் பதில் ஒன்றை பிரதீப் ரங்கநாதன் கொடுத்திருந்தார். இந்த லிஸ்டைத் தாண்டி இன்னும் சில படங்களில் மமிதா நடிக்கவிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி மமிதா நடிக்கவிருக்கும் ̀ப்ரேமலு 2' படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு ஜுன் மாதத்தில் தொடங்கவிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...