ARTICLE AD BOX
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்காலிக குடிலில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரியில் கொண்டு வரப்பட்ட மணலைப் போட்டதில் 5 உயிரிழந்துள்ளனர்.
ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் பசோடி சிவார் என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் தொழிலாளர்கள் சிலர் சிறிய தற்காலிக குடில் அமைத்துத் தங்கி இருந்தனர். இரவில் அந்த குடிலில் தொழிலாளர்கள் உறங்கிக்கொள்வர். அதிகாலை 3 மணிக்கு அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்து வந்தனர். அந்த லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் விரட்டி வந்தனர். மேம்பால கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் லாரி ஓட்டுநர் அவசரமாக மண்ணை டிப்பர் லாரியில் இருந்து கொட்டினார். ஆனால் மணல் அருகிலிருந்த குடில் மீது விழுந்தது.

இதனால் குடில் இடிந்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்தவர்களை மணல் மூடியது. உள்ளே தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமல் லாரி ஓட்டுநர் மணலைக் கொட்டிவிட்டார். மணல் கொட்டப்பட்ட பிறகுதான் உள்ளே தொழிலாளர்கள் உறங்குவது தெரிய வந்தது. உடனே ஓட்டுநர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். மணலில் சிக்கி உயிருக்குப் போராடிய ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டனர். மணலுக்குள் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து உயிரிழந்தனர்.
தப்பியோடிய ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவம் அதிகாலை 3 மணிக்கு நடந்தது. ஆனால் போலீஸார் 18 மணி நேரம் கழித்துத்தான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். மேம்பால ஒப்பந்ததாரர் செலவைக் குறைக்கச் சட்டவிரோத மணலை இரவு நேரங்களில் கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மும்பை: காரைத் தடுத்த செக்யூரிட்டியை காரை ஏற்றிக் கொல்ல முயற்சிஇப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play