ARTICLE AD BOX
Maha Shivratri 2025: பால் குடம் எடுத்த அன்ஷிதா.. மகா சிவராத்திரியில் பால் அபிஷேக வீடியோ!
சென்னை: நேற்று அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி இரவு மகா சிவராத்திரி கோலாகலமாகவும், பக்தி மையமாகவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சின்னத்திரை பிரபலமும் பிக் பாஸ் பிரபலமான நடிகை அன்ஷிதா சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பால் அபிஷேகம் செய்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வெற்றி பெற்றார். பிக்பாஸ் சீசன் 8 இல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களில் மூன்று போட்டியாளர்களின் பெயர் கட்டாயம் இருக்கும். அதாவது போட்டியாளர்கள் அர்னவ், அன்ஷிதா மற்றும் வி.ஜே. விஷால் ஆகியோர் தான் அந்த மூன்று பேர். அதற்கு காரணம் பிக் பாஸ் ரசிகர்களுக்கே நன்றாக தெரியும். பிக் பாஸ்க்கு முன் மற்றும் பின் என அன்ஷிதாவை பிரித்துப் பார்க்கலாம். அதற்கு காரணம் அர்னவ் மற்றும் வி.ஜே. விஷால் ஆகியோர்தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் வரை அர்னவ் உடன் காதலில் இருந்த அன்ஷிதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அர்னவை பிரேக் அப் செய்தார். அதற்கான காரணத்தை மறைமுகமாகக் கூறினார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி என்னையே எனக்கு திருப்பி கொடுத்துள்ளது. நான் இதற்கு முன்னர் ஒருவரை காதலித்தேன். அவரிடம் காதலுக்காக கெஞ்சினேன். ஆனால், அது தவறு என புரிந்து கொண்டேன். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும், நான் நேராக அந்த நபரைச் சந்தித்து பிரேக் அப் எனக் கூறினேன். அதாவது இனிமேல் நீ என் வாழ்க்கையில் இல்லை என தூக்கி எறிந்துவிட்டு வந்தேன் எனக் கூறினார்.

அன்ஷிதா: பிக் பாஸில் அர்னவ்வும் கலந்து கொண்டார். மூன்றாவது வாரத்தில் அர்னவ் வெளியேறினார். அர்னவ் வெளியேறும்போது, அன்ஷிதா மிகவும் மனம் உடைந்து அழுது, அவரை வழி அனுப்பினார். அதன் பின்னர் அன்ஷிதா கிட்டத்தட்ட 90 நாட்கள் வீட்டில் தலை சிறந்த போட்டியாளராகவும் எண்டர்டைனராகவும் இருந்தார். அதற்கிடையில், அன்ஷிதாவுக்கும் விஷாலுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டதால், இருவரும் வீட்டில் அதிகம் ஒன்றாகவே இருந்தனர். செல்ல பெயர் வைத்தால் அழைத்துக் கொண்டனர். இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற பேச்சு அடிபட்டது. இருவரும் இப்போது டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
சிவராத்திரி: இந்நிலையில் அன்ஷிதா சாதரணமாகவே பக்திமான். நேற்று மகா சிவராத்திரி என்பதால் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். பிரத்யேகமாக பாலாபிஷேகம் எல்லாம் செய்து மனமுருக வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், பலரம் இவரது பதிவுக்கு கமெண்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள்.