Madhampatty Rangaraj: மாதம்பட்டிக்கு 2-ஆவது திருமணமா? விவாகரத்து சர்ச்சைக்கு மனைவி வைத்த முற்றுப்புள்ளி!

18 hours ago
ARTICLE AD BOX

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜன் பற்றியும் அவரது சீக்ரெட் காதலி பற்றியும் சமூக வலைத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக பரவி வந்த நிலையில், இதற்க்கு, ஸ்ருதி ரங்கராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். 
 

ஸ்மார்ட்டாக சிந்தித்து வளர்ச்சியை எட்டிய மாதம்பட்டி

தன்னுடைய அப்பாவை தொடர்ந்து சமையல் கலைஞராக மாறியவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் இவரின் தந்தை, திருமணம், காதுகுத்து, போன்ற நிகழ்ச்சிகளுக்கு சமைத்த நிலையில், ரங்கராஜ் கார்ப்பரேட் அளவுக்கு சிந்திக்க துவங்கினார். தன்னுடைய கேன்டியன் மூலம், சில நிறுவனங்களுக்கு சமைத்து கொடுக்க துவங்கிய இவர், பின்னர் 500 - 1000 தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனமாக மாற்றி காட்டினார்.
 

பிரபலங்களின் திருமண விசேஷங்களுக்கும் சமைக்க இவர் தொடங்கி இவர், மெஹந்தி சர்க்கஸ் படம் மூலமாக சினிமாவிலும் அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது புதிய படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளர். மிஸ் மேகி என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
 

சினிமா பிரபலத்தை 2வது திருமணம் செய்யப்போகிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? புயலை கிளப்பிய போட்டோஸ்

அதே போல் விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையிலும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலமானார். இன்று பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்வுக்கு இவர் தான் சமையல் கலைஞராக உள்ளார். குறிப்பாக கடந்த ஓரிரு மதத்திற்கு முன் நடந்த, ராஜமௌலி வீட்டு திருமண நிகழ்ச்சியிலும், விதவிதமான சமையல் செய்து அசத்தி இருந்தார்.
 

இவருடைய சமையலின் தனித்துவமாக பார்க்கப்படுவது, தன்னிடம் கஸ்டமர் எதிர்பார்க்கும் சமையலை பாரம்பரிய சுவை மாறாமல் கொடுப்பதே. மேலும் இதற்காகவே, பிரத்தேயகமாக சில சமையல் கலைஞர்களையும் மாதம்பட்டி ரங்கராஜ் வைத்துள்ளார். அதாவது கேரள ஸ்பெஷல் சமையல்கலை மலையாளிகள் தான் செய்வார்கள். சைனீஸ் ஃபுட் என்றால், அதில் சிறந்து விளங்கும் சைனீஸ் சமையல் கலைஞர் தான் செய்வார். அதே போல் எவ்வளவு பிசியாக இருந்தாலும், சமையல் பணியில்... வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு, சமையல் செய்வார் மாதம்பட்டி. இதுபோன்ற செயல்தான் குறுகிய காலத்தில் இவரை இந்த அளவுக்கு வளர்ச்சியடைய செய்தது.

சொந்த ஊரில் பிரம்மாண்ட கனவு இல்லம்.. பார்த்து பார்த்து புதிய வீட்டை கட்டி வரும் மாதம்பட்டி ரங்கராஜ்..
 

ஜாய் கிரிஸ்டா

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி சமூக வலைத்தளத்தில் சுற்றி வரும் தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாதம்பட்டி ஸ்ருதி என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ள நிலையில், பிரபல காஸ்டியூம் டிசைனரான ஜாய் கிரிஸ்டா -வை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஜாய் சில இன்ஸ்ட்டா பதிவுகளையும் போட்டிருந்தார்.
 

மனைவியை ரங்கராஜ் விவாகரத்து செய்துவிட்டாரா?

அதோடு காதலர் தினத்தன்று ரங்கராஜன் தன்னோடு இருந்ததாக குறிப்பிட்டிருந்த ஜாய் அவர் கிஃப்ட்டாக கொடுத்த சூரிய காந்தி மலரின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். மேலும் தன்னுடைய பெயரில் பின்னர் ரங்கராஜ் என்கிற பெயரை சேர்த்திருந்தால், ரங்கராஜ் அவருடன் டேட்டிங் செய்து வருவது உறுதி ஆகிவிட்டதாகவும், அதே நேரம் முதல் மனைவியை ரங்கராஜ் விவாகரத்து செய்துவிட்டாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

வரிசைகட்டி நிற்கும் சொகுசு கார்கள்.. பிரைவேட் ஜெட் வாங்க வேலை நடக்குது - கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!
 

இந்த நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நான் மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி தான் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை எங்கு போய் முடியுமோ என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Read Entire Article