ARTICLE AD BOX
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை. அதைப்போல, தவெக கட்சியும் புறக்கணித்திருந்தது. அதிமுக மட்டும் விருந்தில் கலந்துகொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சீமான் மீண்டும் பெரியார் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண்..இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் இது மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்” என ஆவேசமாக தெரிவித்தார்.