ARTICLE AD BOX
உலக அமைதி, இந்தியா புத்தர் மற்றும் காந்தியின் நிலம், பாகிஸ்தானுடனான சுமூகப் பேச்சுவார்த்தை முயற்சிகள், விரோதம், விமர்சனங்கள், கோத்ரா ரயில் விபத்துச் சம்பவம், விரதம், ஒழுக்கம், இளைஞர்களுக்கு அட்வைஸ், ஆர்.எஸ்.எஸ், இந்து ராஷ்டிரம் மற்றும் தனது வாழ்க்கை அனுபவங்கள் எனப் பல விஷியங்கள் அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மோடி.

இதற்குமுன் மோடி பல பாட்காஸ்ட்டில் பேசியிருந்தாலும் இது சமூகவலைதளங்கள் எங்கும் வைரலாகியிருக்கிறது. இந்த நேர்காணலில் பெரிதாக முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும், பாட்காஸ்டருமான அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரித்மேன் என்பவர் இந்த நேர்காணலை எடுத்துள்ளதாலும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தியாவில் லெக்ஸ் ஃப்ரிட்மேனுக்குப் பெரிதாக பிரபலம் இல்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்களில், யூடியூப்பில் பிரபலமாக இருப்பவர். எலான் மஸ்க் முதல் இன்று மோடிவரை தொழில்நுட்பம் மற்றும் அரசியல் ஆளுமைகள் பலரை நேர்காணல் செய்திருக்கிறார்.
Modi: மோடிக்காக ரிஸ்க் எடுத்த ட்ரம்ப்; சீனா உடன் போட்டி - உலக முன்னேற்றத்துக்கு மோடி சொன்ன வழி!யார் அந்த லெக்ஸ் ஃப்ரிட்மேன் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
லெக்ஸ் ஃப்ரிட்மேன் ஆப்கானிஸ்தானின் டஜகிஸ்தான் நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர். அவருக்கு 11 வயதாக இருக்கும்போது பொருளாதாரம் மற்றும் கல்வியின் காரணமாக அவரது குடும்பம் அமெரிக்காவிற்குக் குடிபெயர்கிறது. அமெரிக்காவில் டிரெக்சல் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை, முனைவர் படிப்பை முடிக்கிறார்.

தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இயந்திரத்திற்கும், மனிதனுக்குமிடையேயான தொடர்புகளைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் காட்டி, அதுசார்ந்து கூகுள் நிறுவனத்தில் 2014 - 2015ம் ஆண்டு பணிபுரிந்தார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பக்கம் முழுமையாகக் கவனம் செலுத்தத் தொடங்கியவர் புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (MIT) தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்புகளைப் படித்தார்.
Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி2019ம் ஆண்டு ஓட்டுநர்கள் எப்படி காரை இயக்குகிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அதனை டிஜிட்டல் தகவல்களாகப் பதிவு செய்து ஆட்டோமெட்டிக் கார்களை உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். குறிப்பாக, எலான் மஸ்கின் டெஸ்லா காரை ஆட்டோ மெட்டிக்காக மாற்றுவது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அதன் மூலம் எலான் மஸ்க்கின் கவனத்தை ஈர்த்து செயற்கை நுண்ணறிவு குறித்த நேர்காணல் ஒன்றை எடுத்து பிரபலமானார். அதன்பிற்கு பாட்காஸ்டராகப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களை நேர்காணல் எடுக்க ஆரம்பித்தார். லெக்ஸ் ஃப்ரித்மேன் கல்லூரி முதலே அரசியல் மிது ஆர்வம் கொண்டவர் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள். தொழில்நுட்ப ஆளுமையகளை நேர்காணல் செய்தவர், வலோதிமிர் அலெக்சாந்திரவிச் செலேன்ஸ்கி, டோனால்ட் டிரம்ப் என அரசியல் ஆளுமைகளை நேர்காணல் எடுத்தார். இப்போது, இந்தியப் பிரதமர் மோடியை நேர்காணல் எடுத்து பேசுபொருளாகியிருக்கிறார்.
Modi: 'நினைத்துப்பார்க்க முடியாத துயரம்' - கோத்ரா ரயில் எரிப்பு, 2002 கலவரம் பற்றி பேசியதென்ன?