LCU-க்கு எண்டு கார்டு போடும் லோகேஷ்?. முடித்து வைக்க போகும் ரோலெக்ஸ்-டில்லி, மாஸ் அப்டேட்!

9 hours ago
ARTICLE AD BOX

Kaithi 2: லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் (LCU) கூலி படம் சேராது என்பது ஏற்கனவே தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU கான்செப்டை விட்டு விட்டாரா என்று கூட பலருக்கும் சந்தேகம் வந்தது. அந்த சந்தேகத்திற்கு பதிலாக தான் ஒரு அப்டேட் வர இருக்கிறது.

கூலி படம் முடிந்த கையோடு லோகேஷ் கைதி 2 இயக்கப் போகிறார். லோகேஷின் பிறந்தநாளில் கார்த்தி அதை உறுதி செய்து இருக்கிறார்.

LCU-க்கு எண்டு கார்டு போடும் லோகேஷ்

இதில் தான் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விக்ரம் படத்தில் கடைசியில் ரோலக்ஸ் டில்லி என்ற பெயரை கேட்பதோடு அந்த படம் முடிந்திருக்கும்.

இதன் தொடர்ச்சியாக டில்லி மற்றும் ரோலக்ஸ் நேருக்கு நேர் மோதுவது போல் அடுத்த கட்ட கதை நகர்வு இருக்கலாம்.

கைதி இரண்டாம் பாகத்தில் ரோலக்ஸ் என்ட்ரி கொடுக்கிறார். அதே மாதிரி ரோலக்ஸ் கேரக்டரை மட்டுமே வைத்து எடுக்கப்படும் படத்திலும் கைதி டில்லி வர இருக்கிறார்.

இதனால் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து தன்னுடைய LCU உலகத்திற்கு லோகேஷ் எண்டு கார்டு போட அதிக வாய்ப்பு இருக்கிறது.

தடுமாறும் சூர்யாவுக்கு கார்த்தியின் கைதி கண்டிப்பாக கை கொடுக்கும். இதைத்தான் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள் போல.

Read Entire Article