ARTICLE AD BOX
L2 Empuraan Movie Update:நடிகர்-இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் L2 எம்புராண் படத்தின் முன்பதிவு நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. புக் மை ஷோவில், முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் மணி நேரத்தில் 96,140 டிக்கெட்டுகள் விற்பனையாகி, ஜவான், கல்கி 2898 ஏடி, லியோ போன்ற படங்களை விட அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. அத்துடன் முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் முற்றிலும் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
L2 எம்புராண்- டிக்கெட் முன்பதிவு
பிரித்விராஜ், ஒரு மணி நேரத்தில் 96,140 டிக்கெட்டுகள் விற்பனையானதை கொண்டாடும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். மார்ச் 21 அன்று காலை 9 மணிக்கு முன்பதிவு தொடங்கியது, காலை 10:30 மணிக்குள், ஒரு மணி நேரத்திற்கு 96,000 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக சாக்நில்ஃப் தெரிவித்துள்ளது. இந்த முன்பதிவு இன்னும் நாடு முழுவதும் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லை, பெரும்பாலான ஷோக்கள் கேரளாவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 27 அன்று வெளியீடு வரை இந்த வேகம் நீடிக்குமா என்பது தெரியவில்லை.
டிக்கெட் விற்பனை சாதனை
கடந்த டிசம்பரில், புஷ்பா 2: தி ரூல் படத்தின் தயாரிப்பாளர்கள், அல்லு அர்ஜுன் நடித்த அந்தப் படம் முதல் மணி நேரத்தில் 100,000 டிக்கெட்டுகளை விற்றதாகக் கூறினர். ஷாருக்கான் நடித்த ஜவான் 2 மணி நேரத்திற்குள் 41,000 டிக்கெட்டுகளை விற்றது, அதேசமயம் படான் சுமார் 50,000 டிக்கெட்டுகளை விற்றது. விஜய்யின் லியோ முதல் மணி நேரத்தில் 83,000 டிக்கெட்டுகளை விற்றது, அதேசமயம் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி 93,000 டிக்கெட்டுகளை விற்றது.
L2 எம்புராண் பற்றி
L2 எம்புராண் என்பது பிரித்விராஜின் 2019 இல் வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சி. மோகன்லால் மர்மமான குரேஷி அப்ராம் அல்லது ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியலை மையமாகக் கொண்ட இந்தப் படம், சக்திவாய்ந்த நிறுவனங்கள் உலகை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்கிறது.
இந்தப் படத்தில் பிரித்விராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், அபிமன்யு சிங், எரிக் எபோனே, ஜெரோம் ஃப்ளின், நிகாத் கான் ஹெக்டே, மற்றும் சூராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் நடிக்கின்றனர்.
L2 எம்புராண் ரிலீஸ்
L2 எம்புராண் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான டிரைலர், ஸ்டீபனின் கடந்த காலத்தைப் பற்றி மேலும் ஆராயும் என்பதைக் குறிப்பிடுகிறது.
கொரோனாவால் தாமதம்
படத்தின் இயக்குநர் பிரித்விராஜ் பேசுகையில், L2: எம்புராண் லூசிஃபர் எங்கே முடிந்ததோ அங்கிருந்து தொடங்குகிறது என்றார். சலார் படத்தின் விளம்பரத்தின் போது ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய பிரித்விராஜ், “இந்தப் படம் மிகப்பெரிய அளவில் உள்ளது, இடங்களைத் தேர்ந்தெடுப்பது சவாலாக இருந்தது” என்று கூறினார். கொரோனா காரணமாக தாமதமான பிறகு 2022 இல் இந்தப் படத்தின் கதைக்கரு தயாரானது, 2023 இல் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டது. L2: எம்புராண் மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும். என்றார்.
ட்ரெண்டிங்கில் லூசிஃபர்
எல் 2 எம்புராண் படத்தின் அறிவிப்பால், மக்கள் குஷியாகி வரும் நிலையில், எம்புராண் படத்திற்கு முன் லூசிஃபர் கதையை ஆராய தற்போது பலரும் அந்தப் படத்தை பார்த்து வருகின்றனர். இதனால், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் லூசிஃபர் படம் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்