ARTICLE AD BOX

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் டிகாக் (4) விக்கெட்டை இழந்த பிறகு சிறுது தடுமாறியது. அடுத்ததாக ரஹானே மற்றும் நரேன் இருவரும் இணைந்து தங்களுடைய கியரை அதிரடிக்கு மாற்றி பவர்பிளே ஓவரை பக்காவாக பயன்படுத்தினார்கள். அதன்படி, 6 ஓவர்கள் முடிவில் 60 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக சுனில் நரைன் 44 ரன்கள் எடுத்து அரை சதத்தை தவறவிட்டார். அவரைப்போலவே, மற்றோரு பக்கம் அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. இந்த தடுமாற்றத்தில் இருந்து அணியை கொண்டு வரவேண்டும் என்றால் அந்த சமயம் மிடில் ஆர்டரில் ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால், அதுவும் கிடைக்கவில்லை.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 6, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி 19, ரிங்கு சிங் 12 ரன் எடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இவர்கள் விரைவாக பெவிலியனுக்கு திரும்ப காரணமே பெங்களூர் அணியின் சுழற்பந்துவீச்சாளர் க்ருனால் பாண்டியா தான். ஏனென்றால், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை தேவையான நேரத்தில் அவர் தான் எடுத்து கொடுத்தார்.
அவர்களுடைய விக்கெட்டை எடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக பெங்களூர் அணிக்கு பெரிய டார்கெட் வந்திருக்கும். அந்த அளவுக்கு ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது. முதல் 10 ஓவரில் மட்டுமே 100 ரன்கள் எடுத்தது. இப்படி போய்க்கொண்டிருந்த சமயத்தில் தேவையான நேரத்தில் முக்கிய விக்கெட்களை அவர் எடுத்த ஒரே காரணத்தால் தான் கொல்கத்தா அணி கடைசியில் தடுமாறியது.
தடுமாறி தடுமாறி விளையாடி வந்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனையடுத்து பெங்களூர் அணி 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. மேலும், பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக க்ருணால் பாண்டியா 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.