ARTICLE AD BOX
ஜி.வி.பிரகாஷ் புதிதாகத் தொடங்கியிருக்கும் 'பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்' இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் இதில் நடித்திருக்கிறார்கள். அக்ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஜி.வியுடன் நடித்திருக்கும் திவ்யபாரதி, இவ்விழாவில் பேசியபோது, "எனக்கு ரொம்பப் பிடிச்ச இயக்குநர் வெற்றிமாறன் சார். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு ரொம்ப நன்றி. 'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு மூன்று படங்களில் கமிட்டானேன்.
ஆனால், அது எதுவும் ரிலீஸாகவில்லை. என்னோட இரண்டாவது படமாக மறுபடியும் ஜி.வி கூட சேர்ந்து நடித்த இந்தப் படம் ரிலீஸாகுது. அது விதிதான் என்று நினைக்கிறேன்.

திலீப் சுப்புராயன் சார் என்னை சண்டையெல்லாம் போட வச்சிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். கடல் அட்வென்ச்சர், ஆக்ஷன் என படம் நல்லா வந்திருக்கு. எந்த சூழ்நிலையிலும் எனக்குத் துணையாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி." என்று பேசியிருக்கிறார்.
Kingston: `ஜி.வி.பிரகாஷை நடிக்க வேண்டாம்னு சொன்னேன்; அவர் நடிக்க இதுதான் காரணம்..!' - வெற்றிமாறன்