ARTICLE AD BOX
Kingston X Review: இந்த படமாவது ஜி.வி. பிரகாஷுக்கு கை கொடுக்குமா?.. கிங்ஸ்டர் ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: 37 வயதாகும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்த பின்னர் வெளியாகி இருக்கும் படம் தான் கிங்ஸ்டன். விவாகரத்துக்குப் பிறகு இந்த ஆண்டு மோகன் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை படம் வெற்றிப்பெறாமல் சொதப்பியது.
தீபாவளிக்கு பிரதர், பொங்கலுக்கு காதலிக்க நேரமில்லை என படங்களை ரிலீஸ் செய்தாலும் அவருக்கு வெற்றியே கிடைக்கவில்லை. இசையமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் குமார் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்ததாக குட் பேட் அக்லி என இசையில் அசத்தி வரும் நிலையில், ஹீரோவாக கலக்கினாரா என்றால் இல்லை என்பது தான் பதிலாக வரும்.

டார்லிங் எனும் பேய் படத்தின் மூலம் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு முதல் படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடித்த பல படங்கள் அடிவாங்கின. சில படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கடைசியாக திவ்யபாரதியுடன் இணைந்து நடித்த பேச்சுலர் படத்தை இளைஞர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில், மீண்டும் அதே ஜோடி இணைந்து நடித்துள்ள கிங்ஸ்டன் படம் அவருக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பது குறித்த ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
தொடர்ந்து ஃபிளாப்: விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி வரிசையில் ஜி.வி. பிரகாஷ் குமாரும் இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் உள்ளார். மேலும், அவர்களை போலவே இவருக்கும் தொடர்ந்து படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வரிசையாக வெளியான ரிபெல், கள்வன் மற்றும் டியர் படங்கள் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவின. இந்நிலையில், அதிலிருந்து கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி. பிரகாஷை மீட்குமா என்பது நாளை மக்கள் கொடுக்கும் வரவேற்பில் இருந்து தான் தெரிய வரும். பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக ஷோ இன்று திரையிடப்பட்ட நிலையில், அதை பார்த்துவிட்டு குவிந்து வரும் விமர்சனங்களை காண்போம் வாங்க..
ரமேஷ் பாலா விமர்சனம்: விமர்சகரும் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கருமான ரமேஷ் பாலா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கடல் பேய் படத்துக்கு 3.75 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பு சிறப்பாக உள்ளது என்றும் படத்தின் முதல் பாதி முழுவதும் கதையை செட் செய்ய 2ம் பாதி தான் கடல் பேய்களை காட்டி இயக்குநர் கதறவிடுகிறார் என்றும் ஜி.வி மற்றும் திவ்யபாரதி மிரட்டிட்டாங்க என பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
மிரட்டியிருக்காங்க: ஹாலிவுட் தரத்தில் ஒரு தரமான பேய் படமாக கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் கொடுத்திருக்கிறார். புதுவிதமான இந்த முயற்சி நிச்சயம் ரசிகர்களை தியேட்டர்களில் அட போட வைக்கும் என்பது உறுதி என்று இந்த விமர்சகர் 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார். முதல் பாதி முழுவதும் எமோஷனலாகவும் 2ம் பாதியில் இருந்து ஹாரர் படமாகவும் பிரித்து கொடுத்துள்ள விதம் அருமை என்கிறார்.
கடலுக்கு நான் கிங்குடா: ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் நடிகரகாவும் இசையமைப்பாளராகவும் தனது ஒட்டுமொத்த உழைப்பை சிறப்பாகவே கொடுத்துள்ளார். அதிலும், "கடலுக்கு நான் கிங்குடா" என வரும் வசனம் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட். கண்டிப்பாக இப்படியொரு பேய் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.