Kayadu Lohar: சேலத்திலும் பரவிய கயாடு லோஹர் ஃபீவர்.. “நான் இவருக்கு மட்டும்தான் ரசிகை” -யார் அந்த ஹீரோ?
3 hours ago
ARTICLE AD BOX
சேலம் உடையாப்பட்டி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டிராகன் திரைப்பட கதாநாயகி கயாடுலோஹர் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு அவரை மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் அழைத்து வந்தனர். இதன் பின்னர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆண்டுவிழாவை தொடக்கி வைத்தார். பின்னர் நடிகை காயடுலோஹர் உருவம் வரையப்பட்ட போட்டோ அவரிடம் பரிசாக வழங்கப்பட்டது. இதனை அவர் மகிழ்ச்சியுடன் வாங்கிகொண்டார்.
தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது தான் மிகவும் தீவிரமான தளபதி விஜய் ரசிகை. வேறு யாருக்கும் நான் ரசிகை இல்லை என்றார். டிராகன் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு மக்கள் தனக்கு மிகுந்த அன்பை கொடுத்து வருகின்றனர். இந்தப் படத்தை என்னை நம்பி கொடுத்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது தனக்கு தமிழ் பேச தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு உங்கள் முன் சிறப்பாக தமிழ் பேசுவேன் என்றார். தமிழ் திரைப்படங்களில் நடித்ததற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்துள்ளார்கள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத், நடிகர் பிரதீப் உள்ளிட்டவர்களுக்கு தனக்கு வாய்ப்பளித்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டிராகன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வார்த்தைகள் வரவில்லை. கூடிய விரைவில் எனது அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
Read Entire Article